உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளிமின்கடத்தும் பலபடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளிமின்கடத்தும் பலபடிகள் (Photoconductive polymers) என்பவை ஒளியின் முன்னிலையில் மட்டுமே மின்சாரத்தை கடத்துகின்ற பலபடிகளைக் குறிப்பனவாகும். இருளில் ஓரளவுக்கு மின்கடத்தும் தன்மை கொண்டவை அல்லது பொதுவாக மின்கடத்தாப் பொருட்கள் என இவை வகைப்படுத்தப்படுகின்றன. [1] பாலி(9-வினைல்கார்பசோல்) இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். [2] ஒரு சிறந்த ஒளி மின்கடத்தும் பலபடியானது உயர் மின்புலத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான திறனை வெளிப்படுத்தும். மின்னூட்ட ஏந்திகளை திறம்பட உருவாக்கும். மேலும் பலபடி முழுமைக்கும் உருவாக்கிய மின்னூட்ட ஏந்திகளை திறம்பட கொண்டு செல்லும் பண்புகளைக் கொண்டதாகும். [3]

பயன்கள்[தொகு]

நகல் இயந்திரங்கள் மற்றும் சீரொளி அச்சுப்பொறிகள் போன்ற நகலெடுக்கும் உலர்நகலியல் கருவிகளில் ஒளி மின்கடத்தும் பலபடிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் செப்பேடுகள் பத்துHaarer, D i e t r i c h (1990). PHOTOCONDUCTIVE POLYMERS: STRUCTURE, MECHANISMS AND PROPERTIES.
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துNorio Ise; Iwao Tabushi (4 August 1983). An Introduction to Speciality Polymers. CUP Archive. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-24536-4. பார்க்கப்பட்ட நாள் 19 August 2012.
  3. 3.0 3.1 Wang, Ying (4 December 2000). "Photoconductive Polymers". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology.. doi:10.1002/0471238961.1608152023011407.a01. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471238961.