ஒய். எஸ். எம். யூசுப்
Appearance
ஒய். எஸ். எம். யூசுப் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் 1983 ஆம் ஆண்டு முதல் 1987 வரை எம்.ஜி.ஆர் தலைமையில் தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஆகும். 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில்[1] வெற்றிபெற்றார். பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் 1987 வரை தமிழக சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் 25 ஜனவரி 2008 அன்று காலமானார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2013-10-10.
- ↑ http://www.assembly.tn.gov.in/archive/13th_2006/13threview.pdf Page NO 579