உள்ளடக்கத்துக்குச் செல்

ஐயனார் பெரிய கும்பிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண் புரவி
புரவி

ஐயனார் பெரிய கும்பிடு என்பது நடு தமிழ்நாடின் கிராமப் பகுதிகளில் ஐயனாரை வழிபட எடுக்கப்படும் ஒரு திருவிழா ஆகும். இந்த விழாவானது ஆண்டுதோறும் சித்திரை - வைகாசி மாதங்களில் நடத்தப்படுகிறது.

இந்த விழாவினால் கிராமம், குடும்பம், கால்நடைகள் போன்றவை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இரவில் ஐயனார் குதிரையில் வலம் வந்து ஊரைக் காப்பார் என்ற மரபார்ந்த நம்பிக்கையே இதன் அடிப்படை. இதனால் ஐயனார் பெரிய கும்பிடு விழாவின்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற குதிரை சுடுமண் சிற்பத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கையின்போது 20 அடி உயரம் வரையில்கூட சுடுமண் சிற்பங்கள் செய்து காணிக்கையாக வழங்கப்படுகின்றன. இந்த காணிக்கை நிகழ்வானது குதிரையெடுப்பு, புரவியெடுப்பு, புரவிக் காணிக்கை என்று அழைக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் இத்திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான சுடுமண் சிற்பங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அண்மைக் காலமாக இந்த சுடுமண் கலை அழிந்து வருகிறது.

இந்த விழாவின்போது இரண்டுவிதமான சுடுமண் குதிரைகள் காணிக்கைவாக வழங்கப்படுகின்றன. முதலாவது ஐயனார், அவருடைய தளபதி கருப்பரின் வாகனங்கலான குதிரைகள் வழங்கப்படுகின்றன. அடுத்து மாடு, மனிதர், ஆடு, குழந்தை என பக்தர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப சுடுமண் சிற்பங்கள் அமைகின்றன. வேளார் என்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கபட்ட சிலர் மட்டுமே இந்த பிரம்மாண்ட சுடுமண் சிற்பங்களை வடிக்கும் மரபுரிமையைப் பெற்றுள்ளனர்.

இந்த விழாக்களையும், சடங்குகளையும், சுடுமண் குதிரைகளை குயவர்கள் செய்வது, நிறுவுவது என அனைத்தையும் அமெரிக்க- பிரெஞ்சு பெண்ணான ஜுலு வேய்ன் ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார். இவரது தேர்ந்தெடுக்கபட்ட ஒளிப்படங்கள் கொண்ட கண்காட்சியானது, மண்ணில் தோன்றி மண்ணுக்கு: தமிழக சுடுமண் சிற்பக் காணிக்கையும் பக்தியும் என்ற பெயரிலும், 35 நிமிட ஆவணப் படமும் இந்திராகாந்தி தேசியக் கலை மையத்தின் மூலம் நாடு முழுவதும் காட்சிப்படுத்தபட்டுள்ளது வைக்கபட்டுள்ளது. [1]

ஒளிப்படத்தொகுப்பு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. ஆதி வள்ளியப்பன், எங்கே அந்த ஊர்க்குதிரைகள்?, கட்டுரை, தி இந்து சித்திரை மலர் 2016, பக்கம் 162-173
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயனார்_பெரிய_கும்பிடு&oldid=3251902" இலிருந்து மீள்விக்கப்பட்டது