ஐம்பெருங்குழு
தமிழ்நாட்டு மன்னர்கள் நல்லாட்சி புரிய உதவியாக இருந்தவர்களை ஐம்பெருங்குழு என்றும், எண்பேராயம் என்றும் பகுத்துக் காட்டுவது வழக்கம். மதுரைக்காஞ்சி என்னும் நூல் நாற்பெருங்குழு என்று ஒன்றினைக் குறிப்பிடுகிறது.
சங்ககாலத்தில் ஐம்பெருங்குழு
[தொகு]ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவைக்களம்
[தொகு]ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர்.
இவனது பகைவர்கள் உடல் தினவெடுத்து இவனைத் தாக்க வருவதாகச் செய்தி வந்தது. பாண்டியன் வஞ்சினம் பேசுகிறான். அவர்களைப் புறங்காணேன் ஆயின் எனக்கு இன்னது நேரட்டும் என்கிறான்.
இந்த ஐவரோடும் என் கண் போன்ற நண்பரோடும்,கேளிரோடும் இனிமையாக மகிழ்ந்து திளைத்து இப்போது வாழ்கிறேன். பகைவரைப் புறம் காணாவிட்டால் இந்த மகிழ்வான வாழ்க்கை எனக்கு இல்லாமல் போகட்டும் என்கிறான்.
- மாவன்,
- ஆந்தை,
- அந்துவஞ்சாத்தன்,
- ஆதன் அழிசி,
- இயக்கன் எனப்பட்ட ஐவர்.
ஐவர் பணி
[தொகு]- மாவன் - பரித் தலைவன்
- ஆந்தை - ஒற்றன், மதில் தலைவன்
- அந்துவஞ்சாத்தன் - அமைச்சன்
- ஆதன் அழிசி -
- இயக்கன் - காலாள்படைத் தலைவன்
சேரன் அவை
[தொகு]சேரன் செங்குட்டுவன் அவையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[2]
- மந்திரி
- புரோகிதன்
- தூதன்
- ஒற்றன்
- சேனாபதி
ஒப்பு நோக்குக
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது - புறநானூறு 71
- ↑ ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும், ... ‘மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!’ என, - சிலப்பதிகாரம் கால்கோள் காதை
- ↑ சூடாமணி நிகண்டு - 12 பல்பொருள் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி 37