உள்ளடக்கத்துக்குச் செல்

ஐன்ஸ்டைன் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு மோல் (6.022×1023) எண்ணிக்கையிலுள்ள ஒளியணுக்களின் ஆற்றலின் அளவு ஒரு ஐன்ஸ்டைன் (Einstein) அலகு ஆகும்.[1] ஆற்றலானது அலை நீளத்திற்கு எதிர் விகிதத்தில் இருக்குமென்பதால், இவ்வலகு அதிர்வெண்ணைச் சார்ந்திருக்கும். ஆனால் ஆற்றலின் சர்வதேச அலகான ஜூலிற்கும், ஐன்ஸ்டைனுக்கும் தொடர்பில்லை.

ஒளிச்சேர்க்கையின் ஆய்வுகளில் ஒரு மோல் ஒளியணுக்களுக்கு வேறுபட்ட வரையறையைக் கொண்டு ஐன்ஸ்டைன் அலகு பயன்படுத்தப்படுகிறது.[2] ஒளிச்சேர்க்கையின் போதுள்ள கதிர்வீசல் மைக்ரோஐன்ஸ்டைன்/விநாடி/கனமீட்டர் (μE m−2 s−1) என்ற அலகால் அளக்கப்படுகிறது.

இந்த அலகு சர்வதேச அலகாக ஏற்றுக் கொள்ளப்படாததால் இதன் பயன்பாடும் குறைவாகவே உள்ளது. ஜெர்மனி இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பெயரால் இந்த அலகு அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Albrecht Folsing, Albert Einstein: a biography. pg 299. New York. 1997. Viking
  2. Incoll, L. D., S. P. Long, and M. A. Ashmore. 1981. "SI units in publications in plant science." Commentaries in Plant Science. 2: 83-96.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்ஸ்டைன்_(அலகு)&oldid=3447056" இலிருந்து மீள்விக்கப்பட்டது