உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராபாத் மாநிலம் (1948–1956)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
ஐதராபாத் மாநிலம்
இந்திய மாநிலங்கள்

1948–1956 படிமம்:United Andhra Pradesh emblem.jpg
 

 

Coat of arms of

சின்னம்

Location of
Location of
Hyderabad in India (1951)
வரலாறு
 •  ஐதராபாத் சமஸ்தானத்திலிருந்து ஐதராபாத் மாநிலம் உருவாக்கப்பட்டது 1948
 •  மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஆந்திரப் பிரதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது 1956
தற்காலத்தில் அங்கம் தெலங்காணா
மகாராட்டிரம்
கருநாடகம்
States of India since 1947
1956 வரை ஐதராபாத் மாநிலம்

ஐதராபாத் மாநிலம் (Hyderabad State[1]) என்பது மேலாட்சி இந்தியாவிலும் பின்னர் இந்தியக் குடியரசில் இருந்த ஒரு மாநிலமாகும். இது 1948 செப்டம்பரில் ஐதராபாத் இராச்சியம் மேலாட்சி இந்தியாவுடன் இணைந்த பின்னர் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலம் 1948 முதல் 1956 வரை இருந்தது.

இந்திய மாநிலங்களை மொழிவாரியாக மறுசீரமைப்பு செய்ய மாநில மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஐதராபாத் மாநிலம் கலைக்கப்பட்டது. அதன் வெவ்வேறு பகுதிகள் முறையே ஆந்திர மாநிலம், மைசூர் மாநிலம், பம்பாய் மாநிலம் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டன. [2]

வரலாறு

[தொகு]

புதிதாக விடுதலைப் பெற்ற இந்திய ஒன்றியமானது ஐதராபாத் இராச்சியத்தை தன்னுடன் இணைக்க 1948 செப்டம்பரில் மேற்கொண்ட போலோ நடவடிக்கை என்பது ஒரு " காவல் நடவடிக்கையின் " குறியீட்டுப் பெயராகும். [3] இது ஐதராபாத் இராச்சியத்துக்கு எதிராக [4] மேற்கொள்ளபட்ட ஒரு இராணுவ நடவடிக்கையாகும். இதில் இந்திய ஆயுதப்படைகள் நிசாம் ஆட்சி செய்த சமஸ்தானத்தின் மீது படையெடுத்து, இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது. [5]

1947 இல் பிரிவினையின் போதும் அதற்கு முன்பும், கொள்கையளவில் தங்கள் சொந்த பிரதேசங்களுக்குள் தன்னாட்சிக் கொண்டிருந்த இந்தியாவின் சமஸ்தானங்கள், ஆங்கிலேயர்களின் துணை கூட்டணிகளுக்கு உட்பட்டு, அவர்களிடம் தங்கள் வெளி உறவுக் கொள்கையின் கட்டுப்பாட்டைக் கொடுத்திருந்தன. 1947 இந்திய விடுதலைச் சட்டத்துக்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் அத்தகைய கூட்டணியை கைவிட்டனர். மேலும் முழு விடுதலையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை இராச்சியங்களின் வசம் விட்டுவிட்டனர். [6] [7] இருப்பினும், 1948 வாக்கில் கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களும் இந்தியா அல்லது பாக்கித்தானுடன் இணைந்தன. ஆனால் இதில் ஒரு முக்கிய விதிவிலக்காக, மிகுந்த செல்வமும், ஆற்றலும் வாய்ந்த சமஸ்தானமான ஐதராபாத் இருந்தது. அதை நிசாம், மிர் ஓசுமான் அலி கான், என்னும் ஒரு முஸ்லீம் ஆட்சியாளர், பெரும்பான்மையாக வசித்துவந்த இந்து மக்களை ஆண்டுவந்தார். ஐதராபாத்தை தனி நாடாக ஆளும் முடிவை எடுத்து, அதை தன் ஒழுங்கற்ற இராணுவத்தைக் கொண்டு பராமரிக்க முடியும் என்று நம்பினர். [8] : 224  நிசாமோ தெலுங்கானா கிளர்ச்சியால் சூழப்பட்டார். அவரகளை அவால் அவர்களை அடிபணிய வைக்க முடியவில்லை. [8] : 224 

இதனால் 1947 நவம்பரில், ஐதராபாத், இந்திய துருப்புக்களை இராசியத்தில் நிலைநிறுத்துவதைத் தவிர, அதற்கு முந்தைய அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஐதராபாத்தில் ஒரு பொதுவுடமை அரசு நிறுவுவப்படுவதைக் கண்டு அஞ்சுவதாகக் கூறி, [9] [10] இந்தியா 1948 செப்டம்பரில் இராச்சியத்தின் மீது படையெடுத்தது. [11] [12] பின்னர், நிசாம் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். [13]

இந்த நடவடிக்கையின் போது வகுப்புவாத அடிப்படையில் பாரிய வன்முறைக்கு வழிவகுத்தது. இவை சில சமயங்களில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்டன. இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவால் நியமிக்கப்பட்ட சுந்தர்லால் குழு, இராச்சியத்தில் மொத்தம் 30,000-40,000 பேர் இறந்ததாக முடிவுசெய்தது. இது 2013 ஆம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. [14] மற்ற பொறுப்பான நோக்கர்கள் இறப்பு எண்ணிக்கை 200,000 அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். [15]

இராணுவ ஆளுநர்

[தொகு]
மேஜர் ஜெனரல் எல் எட்ரூஸ் (வலதுபுறம்) செகந்திராபாத்தில் உள்ள மேஜர் ஜெனரல் (பின்னர் ஜெனரல் மற்றும் ராணுவத் தலைவர்) ஜே. என். சௌதுரியிடம் ஐதராபாத் இராச்சியப் படைகளை சரணடையச் செய்கிறார்.

இந்திய ஒன்றியத்துடன் இணைந்த பிறகு, போலோ நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜே. என். சௌதுரி 1949 திசம்பர் வரை இராணுவ ஆளுநராக இருந்தார்.[சான்று தேவை]

1952 ஆம் ஆண்டில் உள்ளூர் மக்களுக்கான அரசு வேலைகள் வெளியாட்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களால் நடத்தபட்ட முல்கி போராட்டத்தை மாநிலம் கண்டது.[சான்று தேவை]

ராஜ்பிரமுக்

[தொகு]

ஐதராபாத் இராச்சியத்தின் கடைசி நிஜாமான, மீர் உஸ்மான் அலி கான் (1886-1967) 26 சனவரி 1950 முதல் [16] அக்டோபர் 1956 வரை இராசபிரமுகராக இருந்தார்.

தேர்தல்கள்

[தொகு]

இந்தியாவில் 1952 இல் நடத்தபட்ட மாநிலங்களின் முதல் சட்டமன்றத் தேர்தலில், டாக்டர் புர்குல ராமகிருஷ்ண ராவ் ஐதராபாத் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நேரத்தில், மதராஸ் மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட அதிகாரிகளை திருப்பி அனுப்பவும், 1919 [17] ஆண்டு முதல் ஐதராபாத் இராச்சிய சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த 'முல்கி-விதிகளை' (உள்ளூர் மக்களுக்கே வேலை) கண்டிப்பாக நடைமுறைப்படுத்தக் கோரி தெலங்காணியர் சிலரால் வன்முறைப் போராட்டங்கள் நிகழ்த்தபட்டன.

ஐதராபாத் மாநில மாவட்டங்களின் பட்டியல்

[தொகு]

நிர்வாக ரீதியாக, ஐதராபாத் மாநிலம் பதினாறு மாவட்டங்களால் ஆனது. அவை நான்கு கோட்டங்களாக பிரிக்கபட்டிருந்தன:

அதிகாரப்பூர்வ பெயர் கோட்டம் வரைபடம்
அவுரங்காபாத் அவுரங்காபாத் கோட்டம் </img>
பீடு </img>
நாந்தேட் </img>
பர்பணி </img>
பீதர் குல்பர்கா கோட்டம் </img>
குல்பர்கா </img>
உஸ்மானாபாத் </img>
ராய்ச்சூர் </img>
அட்ராஃப்-இ-பல்டா குல்சனாபாத் (மேடக்) கோட்டம் </img>
மகபூப்நகர் </img>
மேடக் </img>
நல்கொண்டா </img>
நிசாமாபாத் </img>
ஆதிலாபாத் வாரங்கல் கோட்டம் </img>
கரீம்நகர் </img>
வாரங்கல் </img>

மொழிவாரி மறுசீரமைப்பு

[தொகு]

1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக இந்திய மாநிலங்களின் மறுசீரமைத்த போது, ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பகுதிகள் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. மராத்தி மொழி பேசும் பகுதிகள் பம்பாய் மாநிலத்துடனும், கன்னடம் பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடனும் இணைக்கப்பட்டன.

ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் தெலங்காணா பகுதியை அதே மொழி பேசும் ஆந்திரா மாநிலத்துடன் இணைப்பதற்கு, மாநில மறுசீரமைப்பு ஆணையம் உடனடியாக ஆதரவளிக்கவில்லை. இந்த ஆணையத்தின் அறிக்கையின் பத்தி 378, விசாலாந்திரா தேவையா என்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தெலங்காணாவில் கல்வியில் பின்தங்கிய மக்கள் உள்ளனர். ஏனெனில் கடலோர ஆந்திரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் முன்னேறிய மக்களாதலால் அவர்களால் தெலங்காணா சுரண்டப்படக்கூடும் என்ற அச்சமும் இருப்பதாகத் தெரிகிறது.

நனிநாகரீக ஒப்பந்தத்தின் வடிவத்தில் தெலங்காணாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாக ஒப்புக் கொண்ட பின்னர், ஆந்திர மாநிலமும் ஐதராபாத் மாநிலமும் 1956 நவம்பர் முதல் நாளன்று இணைக்கபட்ட ஆந்திரப் பிரதேசமாக உருவானது. ஆனால் 2014 சூனில் தெலுங்கானா தனி மாநிலமாக மீண்டும் உதயமானது. ஐதராபாத் நகரம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு தலைநகராக தொடரும்.

ஐதராபாத் மாநில முதல்வர்கள்

[தொகு]

ஐதராபாத் மாநிலத்தில் தெலங்காணாவின் ஒன்பது தெலுங்கு மாவட்டங்களும், குல்பர்கா கோட்டத்தில் நான்கு கன்னட மாவட்டங்களும், அவுரங்காபாத் கோட்டதில் நான்கு மராத்தி மாவட்டங்களும் அடங்கின.

எண் பெயர் உருவப்படம் பதவிக்காலம் கட்சி [a] பதவியில் இருந்த காலம்
1 எம். கே. வெல்போடி 26 சனவரி 1950 6 மார்ச் 1952 சுயேட்சை (குடிமைப் பணி) 770
2 புர்குல ராமகிருஷ்ண ராவ் 6 மார்ச் 1952 31 அக்டோபர் 1956 இந்திய தேசிய காங்கிரசு 1701

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. This column only names the chief minister's party. The state government he headed may have been a complex coalition of several parties and independents; these are not listed here.

குறிப்புகள்

[தொகு]
  1. "Hyderabad had tried 'NRC' 71 years ago, and failed". 15 September 2019.
  2. "States Reorganization Act 1956". Commonwealth Legal Information Institute. Archived from the original on 16 May 2008. பார்க்கப்பட்ட நாள் 1 July 2008.
  3. "Hyderabad had tried 'NRC' 71 years ago, and failed". The Times of India. 15 September 2019.
  4. "Hyderabad Police Action". Indian Army. Retrieved 13 September 2014.
  5. B. Cohen (2007). Kingship and Colonialism in India's Deccan: 1850–1948. Springer. pp. 159–161. ISBN 978-0-230-60344-8.
  6. Mehrotra, S.R. (1979). Towards Indias Freedom And Partition. Delhi: Vikash Publishing House. p. 247. Retrieved 17 August 2019.
  7. See Section 7 (1) (b): "the suzerainty of His Majesty over the Indian States lapses, and with it, all treaties and agreements in force at the date of the passing of this Act between His Majesty and the rulers of Indian States, all functions exercisable by His Majesty at that date with respect to Indian States, all obligations of His Majesty existing at that date towards Indian States or the rulers thereof, and all powers, rights, authority or jurisdiction exercisable by His Majesty at that date in or in relation to Indian States by treaty, grant, usage, sufferance or otherwise."
  8. 8.0 8.1 Barbara D. Metcalf; Thomas R. Metcalf (2006). A Concise History of India (2nd ed.). Cambridge University Press. ISBN 978-0521682251.
  9. "Delhi felt Razakars, communists a threat to India". Deccan Chronicle. 15 September 2018. Retrieved 4 February 2021.
  10. Ernst, Waltraud; Pati, Biswamoy (18 October 2007). India's Princely States: People, Princes and Colonialism. Routledge. ISBN 978-1-134-11988-2.
  11. Purushotham, Sunil. "Internal Violence: The "Police Action" in Hyderabad - CSSH" பரணிடப்பட்டது 2022-11-11 at the வந்தவழி இயந்திரம். {{cite journal}}: Cite journal requires |journal= (help)
  12. "New book on Hyderabad's Invasion, 1948's Police Action". The Milli Gazette — Indian Muslims Leading News Source. Retrieved 4 February 2021.
  13. Chandra, Mukherjee & Mukherjee 2008, p. 96.
  14. Noorani 2014, Appendix 15: Confidential notes attached to the Sunderlal Committee Report, pp. 372–373
  15. Smith 1950, p. 46.
  16. Ian Copland, The Princes of India in the Endgame of Empire, 1917-1947 (Cambridge University Press, 2002), p. x
  17. "Mulki agitation in Hyderabad state". Hinduonnet.com. Archived from the original on 26 August 2010. பார்க்கப்பட்ட நாள் 9 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்_மாநிலம்_(1948–1956)&oldid=4110529" இலிருந்து மீள்விக்கப்பட்டது