உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராபாத்தின் பொது தோட்டங்கள்

ஆள்கூறுகள்: 17°23′54″N 78°28′10″E / 17.3982°N 78.4695°E / 17.3982; 78.4695
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுத் தோட்டங்கள்
பாக்-இ-ஆம்
பொது தோட்டங்களில் பனை மரங்கள், பின்னணியில் ஹஜ் வீடு.
ஐதராபாத்தின் பொது தோட்டங்கள் is located in தெலங்காணா
ஐதராபாத்தின் பொது தோட்டங்கள்
வகைநகரப் பூங்கா
அமைவிடம்ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
ஆள்கூறு17°23′54″N 78°28′10″E / 17.3982°N 78.4695°E / 17.3982; 78.4695
உருவாக்கம்1846
பொதுப் போக்குவரத்துநம்பள்ளி மெட்ரோ நிலையம்

பொது தோட்டங்கள் (Public Gardens) பாக்-இ-ஆம் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் தெலங்காணாவில் ஐதராபாத்து நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் தோட்டமாகும். இது 1846ஆம் ஆண்டில் ஐதராபாத்தின் நிசாமால் கட்டப்பட்டது. மேலும், இது ஐதராபாத்தின் பழமையான தோட்டமாகும்.

வரலாறு

[தொகு]

பொதுத் தோட்டங்கள், பாக்-இ-ஆம் (பாகியம்) அல்லது பாகம் என்றும் அழைக்கப்படுகின்றன. உருது மொழியில் "பாக்" என்றால் "தோட்டம்" எனவும், "ஆம்" அல்லது "ஆம் ஜனா" என்றால் "பொது" எனப் பொருள்படும். 1846 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 1980க்குப் பிறகு இது "பொது தோட்டங்கள்" என்று அழைக்கப்படத் தொடங்கியது. [1]

ஈர்ப்புகள்

[தொகு]

தெலங்காணா மாநில தொல்பொருள் அருங்காட்சியகம், பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக்கழகம், நன்கு அறியப்பட்ட திறந்தவெளி நடக அரங்கமான "லலிதா கலா தோரணம்", "ஜவகர் பால பவன்", தெலங்காணா சட்டப் பேரவை , சட்டமன்ற அலுவலகக் கட்டிடங்கள் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இன்றும் மக்கள் இதை ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக பயன்படுத்துகிறார்கள். இது நம்பள்ளியில் அமைந்துள்ளது.

தெலுங்கானா மாநில தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு வருகை தருவது கலை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அழகிய பொதுத் தோட்டங்களில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் பழம்பொருட்கள் மற்றும் கலைப் பொருட்களின் களஞ்சியங்களில் ஒன்றாகும். 1920ஆம் ஆண்டில் ஏழாம் நிசாமால் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியக கட்டிடம் இந்திய-சார்சானிக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த அருங்காட்சியகத்தில் பௌத்த கலைக் கண்காட்சி, பிராமணிய மற்றும் சமண கலைக் கண்காட்சி, வெண்கல கலைக் கண்காட்சி, ஆயுதங்கள் மற்றும் கவச கலைக் கண்காட்சி, நாணயவியல் கலைக் கண்காட்சி, அஜந்தா கலைக் கண்காட்சி போன்ற பல கலைக் கண்காட்சிகள் உள்ளன. மாநில அருங்காட்சியகத்திற்கு அருகில் தற்கால கலை அருங்காட்சியகமும் உள்ளது.

அடையாளங்கள்

[தொகு]

தெலங்காணா சட்டப் பேரவை, ஜூபிலி மாளிகை, தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா, இந்திரா பிரியதர்சினி அரங்கம், ஆசிப் டென்னிஸ் சங்கம், லலிதா கலா தோரணம், ஜவகர் பால் பவன் மற்றும் ஷாஹி பள்ளிவாசல் போன்ற சில முக்கிய அடையாளங்கள் இந்தத் தோட்டத்திற்குள் உள்ளன.

புகைப்படங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]