உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராக்சி ஆந்திராக்குயினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயினிசரின் என்றழைக்கப்படும் 1,4-ஈரைதராக்சி ஆந்திராக்குயினோன் ஒரு பொதுவான ஐதராக்சி ஆந்திராக்குயினோன் ஆகும்.[1][2]

ஐதராக்சி ஆந்திராக்குயினோன்கள் (Hydroxyanthraquinones) என்பவை C12H8-n(OH)n(CO)2 என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மங்களாகும். வாய்ப்பாட்டிலுள்ள n ≥ 1 எண்ணிக்கையைக் குறிக்கும். ஏறக்குறைய அனைத்து ஐதராக்சி ஆந்திராக்குயினோன்களும் 9,10-ஆந்திராக்குயினோனின் வழிப்பெறுதிகளாகும்.[3][4][5]

மாற்றியன்கள்

[தொகு]

ஐதராக்சி ஆந்திராக்குயினோன்கள் ஒரு தனித்தன்மை மோனோ ஐதராக்சி வழிப்பெறுதிகளின் ஒப்பீட்டு தெளிவின்மை ஆகும். பெரும்பாலான ஐதராக்சி ஆந்திராக்குயினோன்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஐதராக்சி குழுக்களைக் கொண்டுள்ளன.

ஈரைதராக்சி

[தொகு]

ஈரைதராக்சி ஆந்திராக்குயினோன்கள் C12H6(OH)2(CO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். அலிசரின் என்றழைக்கப்படும் சாயமான 1,2-ஈரைதராக்சி ஆந்திராக்குயினோன் மற்றும் குயினிசரின் ஆகியவை முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.

மூன்றைதராக்சி

[தொகு]

மூன்றைதராக்சி ஆந்திராக்குயினோன்கள் C12H5(OH)3(CO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். பர்புரின் என்றழைக்கப்படும் சாயமான 1,2,4-மூன்றைதராக்சி ஆந்திராக்குயினோன் இவ்வகைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். இது இயற்கையாகத் தோன்றும் சிவப்பு/மஞ்சள் சாயமாகும்.

நான்கைதராக்சி

[தொகு]

நான்கைதராக்சி ஆந்திராக்குயினோன்கள் C12H4(OH)4(CO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். குயினாலிசரின் என்றழைக்கப்படும் சாயமான 1,2,5,8-நான்கைதராக்சி ஆந்திராக்குயினோன் இவ்வகைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.

ஆறைதராக்சி

[தொகு]

ஆறைதராக்சி ஆந்திராக்குயினோன்கள் C12H2(OH)6(CO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். ரூபிகலோல் என்றழைக்கப்படும் சாயமான 1,2,3,5,6,7-ஆறைதராக்சி-9,10-ஆந்திராக்குயினோன் இவ்வகைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். இதுவும் இயற்கையில் தோன்றும் ஒரு சாயமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bien, H.-S.; Stawitz, J.; Wunderlich, K. (2005), "Anthraquinone Dyes and Intermediates", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_355
  2. Bigelow, L. A.; Reynolds, H. H. (1926). "Quinizarin". Org. Synth. 6: 78. doi:10.15227/orgsyn.006.0078. 
  3. Khalafy, J.; Bruce, J. M. (2002). "Oxidative Dehydrogenation of 1-Tetralones: Synthesis of Juglone, Naphthazarin, and α-Hydroxyanthraquinones" (pdf). Journal of Sciences, Islamic Republic of Iran 13 (2): 131–139. http://www.sid.ir/en/VEWSSID/J_pdf/97320020202.pdf. 
  4. Thomson, R. H. (1971). Naturally Occurring Quinones. London: Academic Press. Quoted by Khalafy and Bruce.
  5. Thomson, R. H. (1987). Naturally Occurring Quinones III. London: Chapman and Hall. Quoted by Khalafy and Bruce.