உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்கோண இருஅடிக்கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐங்கோண இருஅடிக்கண்டம்
வகை இருஅடிக்கண்டம்
முகங்கள் 10 சரிவகங்கள், 2 ஐங்கோணிகள்
விளிம்புகள் 20
உச்சிகள் 15
சமச்சீர்மை குலம் D5h
இருமப் பன்முகி நீள் ஐங்கோண இருபட்டைக்கூம்பு
பண்புகள் குவிவு
வலையமைப்பு

ஐங்கோண இருஅடிக்கண்டம் (pentagonal bifrustum) அல்லது முனைதுண்டிக்கப்பட்ட ஐங்கோண இருபட்டைக்கூம்பு (truncated pentagonal bipyramid) என்பது இருஅடிக்கண்டப் பன்முகிகளின் முடிவிலாத் தொடரில் மூன்றாவதாக உள்ள இருஅடிக்கண்ட வகையாகும். ஒரு ஐங்கோண இருஅடிக்கண்டம் 10 சரிவக முகங்களையும் 2 ஐங்கோண முகங்களையும் கொண்டிருக்கும்.

வடிவமைத்தல்[தொகு]

ஒரு ஐங்கோண இருஅடிக்கண்டமானது, ஜான்சன் சீர்திண்மமான நீள் ஐங்கோண இருபட்டைக்கூம்பின் இருமப் பன்முகியாக அமையும். ஒரு ஐங்கோண இருபட்டைக்கூம்பின் துருவ அச்சின் உச்சிகளைத் துண்டிப்பதன் மூலம் இதனை வடிவமைக்கலாம். ஆங்கிலக் கணிதவியலாளர் ஜான் ஆர்ட்டன் கான்வேயின் பன்முகிக் குறியீட்டில் ஐங்கோண இருஅடிக்கண்டத்தின் குறியீடு "t5dP5" ஆகும்.[1]

இரு ஐங்கோண அடிக்கண்டங்களை அவற்றின் அடிக்கு-அடி ஒட்டுவதன் மூலமும் ஐங்கோண் இருஅடிக்கண்டத்தை உருவாக்கலாம். அல்லது ஒருதள முகங்கள் அனுமதிக்கப்பட்டால், இரு ஐங்கோணப் பட்டகங்களின் ஐங்கோண முகங்களை இணைப்பதன் மூலமும் ஐங்கோண இருஅடிக்கண்டத்தை உருவாக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்கோண_இருஅடிக்கண்டம்&oldid=3385983" இலிருந்து மீள்விக்கப்பட்டது