உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய கேரள தம்புரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜா கேரள வர்மா தம்புரான் என்கிற ஐக்கிய கேரள தம்புரான்

கேரள வர்மா தம்புரான் ( Kerala Varma Thampuran; 1870 - ஜூலை 1948) ஐக்கிய கேரள தம்புரான் அல்லது ஏழாம் கேரள வர்மா என்று பிரபலமாக அறியப்படும் இவர், 1946 மற்றும் 1949க்கும் இடையில் கொச்சி இராச்சியத்தை ஆட்சி செய்த மகாராஜா ஆவார். மலையாளம் பேசும் மக்களுக்காக இந்தியாவில் ஒருங்கிணைந்த கேரள மாநிலம் என்ற கருத்தை இவர் முன்வைத்தார். மேலும், பிரித்தானிய மலபார், கொச்சி மற்றும் திருவிதாங்கூரை இணைப்பதற்காக முன் நின்றார். எனவே, அவருக்கு ஐக்கிய கேரள தம்புரான் (கேரளாவை இணைத்த மன்னன்) என்ற பெயர் வழங்கப்பட்டது. இவர் ஜூலை 1948 இல் இறந்தார் (மலையாள நாட்காட்டியின்படி 1123 மிதுனம் 25 ஆம் தேதி). திருச்சூரில் சிறீ கேரள வர்மா கல்லூரி உருவானதற்கு மூளையாக இருந்தவர்.

சுயசரிதை

[தொகு]

1870 இல் பிறந்த இவர் 1946 முதல் கொச்சி இராச்சியத்தை ஆண்டார்.[1]

கொச்சியின் மகாராஜாவான கேரள வர்மா, கேரளாவை ஒன்றிணைப்பதிலும், கொச்சி இராச்சியம் இந்திய ஒன்றியத்தில் இணைவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.[2] ஏப்ரல் 1947 இல், திருச்சூரில் கே. கேளப்பன் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய கேரள மாநாட்டை இவர் தொடங்கி வைத்தார்.[3] இம்மாநாட்டில், 'ஐக்கிய கேரளா' அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[3] மலபார் மாவட்டம், கொச்சி மற்றும் திருவிதாங்கூரை இணைத்து ஒருங்கிணைந்த கேரள மாநிலம் அமைப்பதற்கான இவரது நிலைப்பாட்டிற்காக இவர் பின்னர் 'ஐக்கிய கேரள தம்புரான்' என்று அழைக்கப்பட்டார்.

இறப்பு

[தொகு]

இவர் ஜூலை 1948 இல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "ഐക്യ കേരളം തമ്പുരാൻ". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 2022-05-31.
  2. Pradeep, K. (2019-08-15). "How the Cochin Maharaja, Aikya Keralam Thampuran played a pivotal role in unification of Kerala and of Cochin State's accession to the Indian Union" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/history-and-culture/how-the-cochin-maharaja-aikya-keralam-thampuran-played-a-pivotal-role-in-unification-of-kerala-and-of-cochin-states-accession-to-the-indian-union/article29099822.ece. 
  3. 3.0 3.1 "50 events that cannot be erased from the history of Kerala". Mathrubhumi (in மலையாளம்). Retrieved 2022-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_கேரள_தம்புரான்&oldid=3906771" இலிருந்து மீள்விக்கப்பட்டது