ஏ. பி. கோமளா
ஏ. பி. கோமளா | |
---|---|
பிறப்பு | 28 ஆகத்து 1934 |
இறப்பு | ஏப்ரல் 26, 2024 மடிப்பாக்கம், சென்னை | (அகவை 89)
பணி | இசைக் கலைஞர் |
அறியப்படுவது | பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி |
பெற்றோர் | ஏ. பார்த்தசாரதி, இலட்சுமி |
ஏ. பி. கோமளா (A. P. Komala, 28 ஆகத்து 1934 – 26 ஏப்ரல் 2024)[1][2] தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[3] இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.
பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள், பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
விருதுகள்
[தொகு]- கலைமாமணி (தமிழ்நாடு அரசு, 2001)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tribute to singer A.P. Komala". தி இந்து. 23 May 2024. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
- ↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. பி. கோமளா