உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. ஏ. ரசீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஏ. ரசீது (A. A. Rasheed - பிறப்பு 1 ஜூலை 1923) தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கல்வி[தொகு]

ரசீது,பள்ளிப்படிப்பை ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி படிப்பை மாநிலக் கல்லூரி, சென்னையிலும்பயின்றார்.

அரசியல்[தொகு]

கல்லூரிக்காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.[2]

பதவிகள்[தொகு]

  • கவுன்சிலர், சென்னை மாநகராட்சி
  • செயலாளர், நஞ்சம்பட்டி இஸ்மியா பள்ளி
  • உறுப்பினர், மெட்ராஸ் ரைபிள் கிளப்.
  • உறுப்பினர், தென்னிந்திய வர்த்தக சபை, சென்னை.
  • உறுப்பினர், தென்ந்திய தோல் மற்றும் தோல்பொருட்கள் வர்த்தக சங்கத்தின், சென்னை.

பொழுதுபோக்கு[தொகு]

வலைப்பந்து, குதிரையேற்றம், துப்பாக்கிசுடுதல்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஏ._ரசீது&oldid=4021114" இலிருந்து மீள்விக்கப்பட்டது