ஏலூரு புத்தர் பூங்கா
ஏலூரு புத்தர் சிலை | |
---|---|
நின்ற கோலத்தில் அபய முத்திரை காட்டும் புத்தர் சிலை | |
அமைவிடம் | ஏலூரு, இந்தியா |
ஆள்கூற்றுகள் | 16°42′30″N 81°06′45″E / 16.70833°N 81.11250°E |
உயரம் | 74 அடி உயரம் |
திறப்பு | 5 மே 2013 |
நிர்வகிக்கும் அமைப்பு | ஏலூரு மாநகராட்சி |
ஏலூரு புத்தர் பூங்கா இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில் அமைந்துள்ளது.ஏலபுரி என்பது ஏலூர் நகரத்தின் பண்டைய பெயராகும். கஜ வல்லிவாரி செருவு (ஆங்கிலம்: Gaja Vallivari Cheruvu) என்பது ஏலபுரி நகரத்தில் (ஆங்கிலம்: Helapuri town) உள்ள பழமையான குளங்களில் ஒன்றாகும். சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் யானைகள் இக்குளத்தில் தண்ணீர் குடித்தன. கி.பி. 11 ஆம் நூற்றாண்டு வரை, ஏலூரு வேங்கி வம்சத்தின் முன்னாள் தலைநகரமாகத் திகழ்ந்தது. [1]
புத்தர் சிலை
[தொகு]கஜ்ஜலவரி செருவு [2] என்ற பெயரில் அமைந்துள்ள குளத்தின் நடுவில் ஓர் அற்புதமான 74 அடி [3] உயர புத்தர் சிலை கட்டப்பட்டது. புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக ஓர் ஓவியக் கூடமும் உருவாக்கப்பட்டது. சிலையின் பீடத்தில் புகழ்பெற்ற அமராவதி சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ஐக்கிய ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த நல்லாரி கிரண் குமார் ரெட்டி இதனை திறந்து வைத்தார். [4]
மேலும் பார்க்கவும்
[தொகு]- மிக உயரமான சிலைகளின் பட்டியல்
- சிலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Buddha Park History". Buddha Park History ~ BUDDHA PARK - ELURU. 2013-06-12. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
- ↑ Nagaraja, G. (2013-05-04). "Gajjalavari Cheruvu set to turn into a Buddhist centre" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/gajjalavari-cheruvu-set-to-turn-into-a-buddhist-centre/article4682712.ece.
- ↑ "Infotainment for schoolchildren" (in en-IN). The Hindu. 2014-05-12. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/infotainment-for-schoolchildren/article6001576.ece.
- ↑ Karan, Ram (2015-10-25). "Buddhist motifs for Brand Amaravati" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/stateview-amaravatis-buddhist-past/article7800561.ece.