உள்ளடக்கத்துக்குச் செல்

ஏதோ செய்தாய் என்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏதோ செய்தாய் என்னை
இயக்கம்ஜெ. எல்வின் போசர்
தயாரிப்புஆதிசக்தி
கதைஜெ. எல்வின் போசர்
இசைகணேஷ் பி. குமார்
நடிப்புசக்தி
லினியாசிறீ
ஆனந்த்
ஆனந்த் பாபு
ஜான் விஜய்
சிறீநாத்
ஒளிப்பதிவுஎழிலரசன்
படத்தொகுப்புமகாலட்சுமி
கலையகம்ஆதிசக்தி மூவிஸ்
வெளியீடுஆகத்து 17, 2012 (2012-08-17)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடி

ஏதோ செய்தாய் என்னை (Etho Seithai Ennai) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் அதிரடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் சக்தி, லியாஸ்ரீ, ஆனந்த் ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரத்தில் நடிக்க, ஆனந்த் பாபு, இளவரசு, ஜான் விஜய். ஸ்ரீநாத் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெ. எல்வின் போசர் எழுதி இயக்கினார். இத்திரைப்படம். 2012 ஆகத்து அன்று வெளியாகி, எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.[1] படம் பெருந் தோல்வியை சந்தித்தது.[2][3]

கதை

[தொகு]

அர்ஜுன் (சக்தி) பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் தனது வகுப்புத் தோழியான சாலினியை (லியாஸ்ரீ) காதலிக்கிறான். உள்ளூர் டான்/தொழிலதிபர் நம்பி (ஆனந்த்) சாலினியின் தாய் மாமன் ஆவார். ஒரு கட்டத்திற்கு அப்பால், சாலினி அர்ஜுனின் உண்மையான காதலால் ஈர்க்கப்படுகிறாள். ஒரு சமயம் நம்பி சாலினியையும் அர்ஜுனையும் ஒன்றாகக் கண்டு கோபமடைகிறார். ஆனால் சாலினி நம்பியை சமாதானப்படுத்தி அவர் தங்கள் காதலை ஏற்றுக்கொள்ள செய்கிறாள். திடீரென்று, அர்ஜுன் காணாமல் போகிறான். நம்பியை வளைப்பதற்கான வழிமுறையாக நம்பியின் வணிக போட்டியாளன வீரு (ஆனந்த் பாபு) அர்ஜுனை கடத்தியது தெரியவருகிறது. வீரு நம்பியை தொடர்பு நம்பி தன்னிடம் சில முக்கிய வணிக ஒப்பந்தங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் அர்ஜுனைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். அர்ஜுனின் பாதுகாப்பைக் கருதி வீருவின் நிபந்தனைகளை நம்பி ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், பின்னர் நம்பியின் உண்மை உருவம் வெளிப்படுகிறது. அவருக்கு அர்ஜுன் மற்றும் ஷாலினியின் காதல் பிடிக்கவில்லை. நம்பி ஆவணங்களைக் கொண்டு வரவில்லை என்றால் வீரு அர்ஜுனைக் கொன்றுவிடுவார் என்று நம்பி மகிழ்ச்சியடைகிறார். ஆனால் அர்ஜுன் வீருவின் குண்டர்களுடன் சண்டையிட்டு அங்கிருந்து தப்பித்து நம்பியை சந்திக்க வந்து அதன் மூலம் ஷாலினிக்கு நம்பியின் உண்மை உருவை புரியவைக்கிறான். பின்னர் அர்ஜுனுக்கும் ஷாலினிக்கும் திருமணம் நக்கிறது.

நடிப்பு

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கான இசையை கணேஷ் பி. குமார் அமைத்தார். பாடல் வரிகளை திவாகர், முகில், ஜார்ஜினா ஆகியோர் எழுதினர்.

  • "பால் இன் லவ்" - பாடகர் (கள்): தாரா குமாரவேலு
  • "காதில் மட்டும் இன்பமா" - பாடகர் (கள்): கிரிஷ், ஷெக்கினா ஷான்
  • "முழு நிலவு ஒன்று" - பாடகர் (கள்): அபிலாஷ்
  • "ஓ மை லவ்" - பாடகி (கள்): ஷாலினி சிங், சந்தோஷ்
  • "போகமல் ஒருநாளும்" - பாடகர் (கள்): விஜய் நரேன், ஸ்ருதி, ஸ்ம்ருதி, ஸ்ரீக்

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-08-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
  2. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/etho-seithai-ennai/movie-review/15557451.cms
  3. http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aug-12-03/etho-seithai-ennai-review.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதோ_செய்தாய்_என்னை&oldid=4122552" இலிருந்து மீள்விக்கப்பட்டது