உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்

தொடரின் சின்னம்
வகை நிகழ் நேர வியூகம்
நிரல் உருவாக்குனர் என்செம்ப்ல் ஸ்டுடியோஸ்
Big Huge Games
ரோபோட் என்டர்டைன்மென்ட்
வெளியீட்டாளர் மைக்ரோசாப்ட் ஸ்டுடியோஸ்
முதல் வெளியீடு ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்
அக்டோபர் 15, 1997
இறுதி வெளியீடு ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் ஆன்லைன்
ஆகஸ்ட் 16, 2011
கிளை ஆக்கங்கள் ஏஜ் ஆஃப் மைதாலஜி (The Titans)


ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் (Age of Empires) என்பது தொடர் கணினி விளையாட்டுகள் ஆகும். ஆன்செம்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு மைக்ரோசாப்ட் ஸ்டுடியோவால் 1997 வெளியிடப்பட்டது. ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்-க்கு பிறகு ஏழு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்று நிகழ்நேர வியூக விளையாட்டு. இவ்விளையாட்டில் இரண்டு விதமாக விளையாடலாம் - ஒன்று ஏதாவதொரு வரைபடத்தில் ஆடும் ஆட்டம் மற்றொன்று தொடர்ச்சியான விளையாட்டு (campaign).

ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் I ஆனது வரலாற்று காலங்களில் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டது. ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் கற்காலம் முதல் தற்காலம் வரை நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது.அதன் விரிவாக்கமான தி ரைஸ் ஆஃப் ரோம் ஆனது ரோம் நாட்டு அரசரின் எழுச்சியைப் பற்றியது.தி ஏஜ் ஆஃப் கிங்ஸ் ஆனது இரண்டாவது தொடராகும்.அதன் விரிவாக்கம் தி கன்கொயரர்ஸ்(Conquerors) ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ வில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது.அதன் பிறகு மூன்றாவது தொடர் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் III வெளி வந்தது.இதன் விரிவாக்கம் தி வார்ச்சீஃப்ஸ் மற்றும் ஆசியன் டயனஸ்டிஸ்.இவை முறையே ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது.இவை அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றம் நடந்த காலத்தை அடிப்படையாக கொண்டது.தற்பொழுது ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் ஆன்லைன் வெளிவந்துள்ளது

விளையாட்டுத் தொடர்களின் பட்டியல்

[தொகு]
  • ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்: தி ரைஸ் ஆஃப் ரோம்
  • ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் II: தி ஏஜ் ஆஃப் கிங்ஸ்; தி கன்கொயரர்ஸ்
  • ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் III :தி வார்ச்சீஃப்ஸ்; ஆசியன் டயனஸ்டிஸ்
  • ஏஜ் ஆஃப் மைதாலஜி: தி டைடன்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஜ்_ஆஃப்_எம்பயர்ஸ்&oldid=2917714" இலிருந்து மீள்விக்கப்பட்டது