ஏக்தா பரிசத்
ஏக்தா பரிசத் (தமிழ்: ஒற்றுமை மன்றம்; ஆங்கிலம்: Ekta Parishad) என்பது நில வள உரிமைகளுக்காக அறவழியில் செயற்படும் குமுக அமைப்புகளின் ஒன்றியம் ஆகும். இது அரச/சமய/சாதி சார்பற்றது, இலாப நோக்கமற்றது. சுமார் 11,000 குமுக அமைப்புகளையும், ஆயிரக்கணகான தனிநபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இராசகோபால் பி. வி இந்த அமைப்பின் தோற்றுனர் ஆவார்.
நோக்கங்கள்
[தொகு]ஏக்தா பரிசத் அமைப்பு பழங்குடிகளின், நிலமற்ற தொழிலாளர்களின் நில, வள உரிமைகளுக்கான போராட்டங்களை அற வழியில் முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டது. நிலம், நீர், காட்டு, கனிம மற்றும் பிற வள உரிமைகளை அடிப்படை மனித உரிமைகளாக ஏக்தா பரிசத் அணுகிறது. நிலச் சீர்திருத்தம், குறிப்பாக நிலமற்ற விழிம்புநிலை மக்களுக்கு நிலம் வழங்குவது இவர்களின் ஒரு முக்கிய கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்கு முன்வைத்து மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பையும் போராட்டங்களை இது முன்னெடுத்து வருகிறது. காந்திய இலக்கான தன்னிறைவு கொண்ட ஊர்கள் இவர்களின் ஒரு கருத்தியல் இலக்காக அமைகிறது.[1]
வியூகம்: காந்தியவழி அறப்போராட்டம்
[தொகு]ஏக்தா பரிசத் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்ட காந்தியவழி அறப் போராட்டக் கொள்கையைக் (சத்தியாக்கிரகம், அகிம்சை) கொண்டுள்ளது. வேரடி அமைப்புகளோடு சேர்ந்தியங்கி, ஒருங்கிணைந்து தனது போராட்டத்தை முன்னெடுத்து, அரசியல் அழுத்தங்களை கீழ் நிலையிலும் மேல் நிலையிலும் உருவாக்கி, அரச கொள்கையிலும் நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதை தனது வியூகமாகக் கொண்டது. மக்களின் ஆற்றல்களை வளர்ப்பதும் (community capacity building), நடுத்தர மற்றும் மாணவர் சமூகங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதும், ஊடக மற்றும் அனைத்துலக ஒத்துணர்வை பெற்றுக்கொள்வதும் இவர்களின் வியூகங்களில் முக்கியம் பெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajagopal and his followers say they are inspired by the example set by Mahatma Gandhi and his ideal of a nation of self-sufficient villages." India's peasant farmers gather for protest march on Delhi
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ வலைத்தளம் - (ஆங்கில மொழியில்)
- யுடீயூப் - அதிகாரபூர்வ channel - (ஆங்கில மொழியில்)