ஏக்கர் அடி
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/8/82/Acrefoot.jpg/300px-Acrefoot.jpg)
ஏக்கர் அடி (Acre foot) என்பது கன அளவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு அலகு ஆகும். பொதுவாக, ஏரிகள், நீர்காவிகள், கால்வாய்கள், சாக்கடை நீரோட்ட அளவு, ஆற்று நீரோட்டம் போன்ற பெரிய அளவிலான நீர்வளங்கள் தொடர்பில் இந்த அலகு பயன்படுத்தப்படுகின்றது.
வரைவிலக்கணம்[தொகு]
ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஒரு அடி ஆழமுள்ள நீரின் கன அளவே ஒரு ஏக்கர் அடி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. ஒரு ஏக்கர் 66 அடி x 660 அடி (1 சங்கிலி x 1 பர்லாங்) என்பதால் அது சரியாக 43,560 சதுர அடி ஆகின்றது. எனவே ஒரு ஏக்கர் அடி 43,560 x 1 கன அடியாகும். அமெரிக்க கலன், கன மீட்டர், லீட்டர் ஆகிய கன அளவுகளோடு இது பின்வருமாறு தொடர்புகளைக் கொண்டுள்ளது:
- 1 ஏக்கர் அடி = 325,851 அமெரிக்க கலன்
- 1 ஏக்கர் அடி = 1,233.5 கன மீட்டர்
- 1 ஏக்கர் அடி = 1,233,500 லீட்டர்