உள்ளடக்கத்துக்குச் செல்

எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்"
ஆசிரியர்பிரான்ஸ் காஃப்கா
தொடக்கத் தலைப்பு"Ein Hungerkünstler"
மொழிபெயர்ப்பாளர்எச். ஸ்டெய்ன்ஹவுர் மற்றும் ஹெலன் ஜெசிமன் (1938)
வில்லா மற்றும் எட்வின் முயர் (1948)
நாடுஜெர்மனி (ஆஸ்திரியா-ஹங்கேரியில் எழுதப்பட்டது)
மொழிஜெர்மன்
வகை(கள்)சிறுகதை
வெளியிடப்பட்ட காலம்Neue Rundschau
பதிப்பு வகைperiodical
வெளியிட்ட நாள்1922
ஆங்கிலப் பதிப்பு1938
Ein Hungerkünstler 1924 பதிப்பின் தலைப்புப் பக்கம்

"எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்"(A Hunger Artist, ஜெர்மன்: "Ein Hungerkünstler" ) என்பது 1922 இல் Die neue Rundschau இதழில் முதன்முதலில் வெளியான பிரான்ஸ் காஃப்காவின் ஒரு சிறுகதை ஆகும். காஃப்கா வெளியீட்டிற்காகத் தயாரித்த கடைசிப் புத்தகமான எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட் தொகுப்பிலும் இந்தக் கதை சேர்க்கப்பட்டுள்ளது, இது அவரது மரணத்திற்குப் பிறகு வெர்லாக் டை ஷ்மிடே பதிப்பகதால் வெளியிடப்பட்டது. கதாநாயகன், ஒரு பட்டினிக் கலைஞன் அவன் தனது கலைக்கான ஆதரவை இழக்கத் தொடங்குகிறான். "எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்" சிறுகதையானது மரணம், கலை, தனிமைப்படுத்தல், துறவு, ஆன்மீக வறுமை, பயனற்று இருத்தல், தனிப்பட்ட தோல்வி, மனித உறவுகளின் சிதைவு போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறது. இந்தக் கதையின் தலைப்பு "ஒரு உண்ணாவிரத கலைஞன்"மற்றும்"ஒரு பட்டினி கலைஞன்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கதை

[தொகு]

"எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்" மூன்றாம் நபர் கதை மூலம் பின்னோக்கிச் சொல்லப்படுகிறது. கதை சொல்பவர் இன்றிலிருந்து பல தசாப்தங்களுக்கு முன்பு தொழில்முறை பட்டினிக் கலைஞனைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்ட ஒரு காலத்தைப் பார்க்கிறார், பின்னர் அத்தகைய கலை மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை சித்தரிக்கிறார்.

பட்டினி்க் கலைஞன் ஒரு கடிகாரம் கொஞ்சம் வைக்கோல் தவிர வேறு எதுவும் இல்லாத ஒரு கூண்டில் இருப்பார். பட்டினிக் கலைஞன் தன்னை ஆர்வமுடன் காண வந்துள்ள பார்வையாளர்களுக்காக சுற்றி வருவார். இந்த பட்டினி 40 நாட்கள் வரை தொடரும். பட்டினிக் கலைஞன் சாப்பிடுகிறானா என்பதைக் கண்காணிக்க மூன்று வேளைகளும் காவலர்கள் கூண்டை சுற்றி வருவார்கள். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பார்வையாளர்கள் சிலர் உட்பட பலர், பட்டினிக் கலைஞன் ஏமாற்றுகிறார் என்று கருதினர். இவரது விளம்பரதாரரால் இவரது உண்ணாவிரதத்திற்கு விதிக்கப்பட்ட நாற்பது நாள் வரம்பும், இத்தகைய சந்தேகங்களும் பட்டினிக் கலைஞனுக்கு எரிச்சலூட்டுகிறன்றன. மேலும் நாற்பது நாட்களுக்குப் பிறகு, பட்டினிக் கலைஞன் மீதான பொது மக்களின் ஆர்வம் குறைந்துவிடுகிறது. ஆனால் பட்டினிக் கலைஞன் தனது சாதனையை அதிகப்படுத்த காலவரையின்றி உண்ணாவிரதம் இருக்க விரும்பினாலும் அது தடுக்கப்படுகிறது, மேலும் உண்ணாவிரத காலத்தின் முடிவில், பட்டினிக் கலைஞன், மிகவும் ஆரவாரங்களுக்கு மத்தியில், தனது கூண்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டு சாப்பிட வைக்கபடுவார். இவை இரண்டும் அவருக்கு எப்போதும் கோபத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த புறகு கால இடைவெளிவிட்டு பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன.

ஒரு கட்டத்தில் பட்டினிக் கலை வீழ்சியடைகிறது. அது அவனை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறது. பசி கலைஞன் கண்காட்சியுடன் தனது உறவை முறித்துக் கொண்டு ஒரு வட்டரங்கில் (சர்க்கஸ்) வேலைக்கு சேர்கிறான். அங்கு தான் உண்ணாநோன்பின் உண்மையிலேயே அற்புதமான சாதனையை நிகழ்த்தலாம் என்று நம்புகிறான். அவனுக்கு வட்டரங்கின் ஒதுக்குப் புறமான பகுதியில், விலங்கு கூண்டுகளுக்கு அருகில் ஒரு கூண்டு ஒதுக்கபடுகிது. ஆனால் முன்புபோல அவனால் மக்களின் பாராட்டைப் பெறமுடியவில்லை. அருகிலுள்ள விலங்குகளைப் பார்க்க வருபவர்கள் இவனையும் பார்க்கின்றனர். பசி கலைஞர் ஆரம்பத்தில் இடைவேளையை எதிர்நோக்கினார், ஆனால் காலப்போக்கில் அவர் அவர்களைப் பயமுறுத்த வந்தார், ஏனென்றால் அவை சத்தம் மற்றும் இடையூறு மற்றும் சூரியனில் அவரது நாட்கள் போய்விட்டன என்பதை நினைவூட்டுகின்றன. விலங்குகளின் காட்சிகள், ஒலிகள் மற்றும் வாசனைகளால் அவர் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்தார், ஆனால் அவர் ஒரு ஈர்ப்பை விட எரிச்சலூட்டுகிறார் என்ற உண்மையை கவனத்தை ஈர்க்கும் பயத்தில் அவர் புகார் செய்யத் துணியவில்லை.

கடைசியில், பட்டினிக் கலைஞனை பொதுமக்கள் முற்றாக புறக்கணித்ததால், அவன் உண்ணாவிரதம் இருந்த நாட்களை கூட யாரும் கணக்கிடவில்லை. ஒரு நாள், பட்டினிக் கலைஞன் உள்ள கூண்டைப் பார்க்கும் மேற்பார்வையாளர், அது ஏன் பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று என்று கேட்கிறார். அதில் பட்டினிக் கலைஞன் ஒருவன் இருந்த விசயத்தைத் தெரிவிக்காறார். பின்னர் அவரும் சில உதவியாளர்களும் வைக்கோல் குவியலுக்குள் இறக்கும் தருவாயில் உள்ள பட்டனினக் கலைனை கண்டெடுக்கின்றனர். அவன் இறப்பதற்கு முன், மன்னிப்பு கேகிறான்.தன் கலைக்காக தன்னைப் போற்றப்படக்கூடாது என்று என்று கூறுகிறான். ஏனெனில் தான் உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணம் தனக்கு விருப்பப்படி உணவைக் காண முடியாததே அதைக் கண்டிருந்தால் மற்றவர்களைப் போல தான் உண்டிருப்பேன் என்கிறான். பசி கலைஞன் உடல் அவனது கூண்டிலிருந்து வெளியே எடுக்கபட்டு அதில் ஒரு சிறுத்தை விடப்படுகிறது.

கருப்பொருள்

[தொகு]

"எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்ர்" பற்றிய திறனாய்வு விளக்கங்களிடையே ஒரு கூர்மையான பகுதிகள் உள்ளன. பெரும்பாலான வர்ணனையாளர்கள் கதை ஒரு உருவகம் என்று ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அவர் எதைப் உருவகப்படுத்துகிறார் என்பதில் ஒத்தக் கருத்து இல்லை.

தமிழ் மொழிபெயர்ப்பு

[தொகு]

எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட் சிறுகதையை சி. சு. செல்லப்பா பட்டினிக் கலைஞன் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பட்டினிக் கலைஞன் - 100: கலையின் உன்மத்தம்". 2024-06-09. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_ஹங்கர்_ஆர்ட்டிஸ்ட்&oldid=4058221" இலிருந்து மீள்விக்கப்பட்டது