உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். மோசேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். மோசேஸ் கிழக்கிலங்கை மட்டகளப்பை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச தேசிய விருதுகள், சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருது, இலக்கியத்திற்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதுகளை பெற்றுள்ளார்.[சான்று தேவை] சமூக விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இவரது நாடகங்கள் தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிக்கான அரச தேசிய உயர் விருதுகளையும் பெற்றுள்ளது.[சான்று தேவை] 2005ம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நாடக நெறியாளருக்கான அரச தேசிய உயர் விருதினையும் இலங்கைப் பிரதமரிடமிருந்து பெற்றுள்ளார்.[சான்று தேவை]

இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார். 2009 முதல் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய அரச தொலைக்காட்சி விருதினை பெற்றுவரும் ஒரேயொரு தமிழ் தயாரிப்பாளர் இவராவார்.[சான்று தேவை] 2012 முதல் இவரால் தயாரித்து, தொகுத்து வழங்கப்பட்டுவரும் 'இப்படிக்கு சட்டம்' என்ற சட்டம் தொடர்பான தமிழ் நேர்காணல் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே புகழ்பெற்றது.[சான்று தேவை]

தயாரித்து இயக்கிய தொலைக்காட்சி நாடகங்கள்

[தொகு]
  • மனிதம்
  • ஏக்கம்
  • வாழையடி வாழை
  • நியதி
  • மாற்றம் (2009ம் ஆண்டின் தேசிய அரச உயர் விருது பெற்றது)
  • புதுமைப்பெண் (2012ம் ஆண்டின் தேசிய அரச உயர் விருது பெற்றது)
  • இறைவன் நம்மோடு,
  • ஒரு சின்ன முத்தம்


நூல்கள்

[தொகு]
  • தொழிநுட்ப கலைகள்
  • வெகுஜன ஊடகம்
  • கலை இலக்கியக் கட்டுரைகள்
  • தமிழின் கதை கூறும் மரபு
  • இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள்
  • வெகுஜன தொடர்பாடல்,
  • தொலைக்காட்சி திரைப்பட தயாரிப்பும் முகாமைத்துவமும்,
  • தொலைக்காட்சி திரைப்பட வானொலித் தொழினுட்பம்
  • விளம்பரமும் மக்கள் தொடர்பாடலும்,
  • ஊடகவியல் - பத்திரிகை சார் நெறிமுறைகள்,
  • செய்தியியல்
  • தொலைக்காட்சி செய்திகள்
தளத்தில்
எஸ். மோசேஸ் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மோசேஸ்&oldid=3909201" இலிருந்து மீள்விக்கப்பட்டது