எஸ். டி. பர்மன்
சச்சின் தேவ் பர்மன் S. D. Burman | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | শচীন দেববর্মণ |
பிறப்பு | கோமிலா, வங்காளதேசம், பிரித்தானிய இந்தியா | 1 அக்டோபர் 1906
இறப்பு | 31 அக்டோபர் 1975 மும்பை, மகாராட்டிரம், ![]() | (அகவை 69)
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 1933–1975 |
எசு. டி. பர்மன் அல்லது சச்சின் தேவ் பர்மன் ( S. D. Burman) Sachin Dev Burman) (அக்டோபர் 1, 1906 –அக்டோபர் 31, 1975) என்பவர் இந்தி திரையுலகப் பின்னணி இசையில் தனிப்பெரும் ஆளுமை கொண்டவர். ரசிகர்களால் "தாதா" என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன், திரிபுரா மன்னரின் நேரடி வாரிசு ஆவார்.[1]
இவர், இந்தியிலும் வங்காளத்திலும் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.[2] இலதா மங்கேசுகர், முகமது ரபி, கிசோர் குமார், ஆசா போசுலே, கீதா தத் போன்ற பாடகர்கள் பர்மனின் இசை அமைப்பில் பாடியுள்ளார்கள். எசு. டி. பர்மன், 14 இந்தி திரைப்படங்களிலும் 13 வங்காள மொழித் திரைப்படங்களிலும் பாடல்கள் தாமே பாடியுள்ளார். இவரது மகன் ராகுல் தேவ் பர்மன் பாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசையமைப்பாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அக்டோபர் 1, 1906 அன்று, அன்றைய பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் (தற்போது பங்களாதேஷ்), கொமிலா என்னும் இடத்தில் பர்மன் பிறந்தார். எஸ். டி. பர்மனின் தந்தையார், திரிபுராவின் ராச குடும்பத்தைச் சார்ந்த நபாட்விப்சந்திர தேவ் பர்மன் மற்றும் தாயார் மணிப்பூர் மன்னர் குடும்பத்தைச் சார்ந்த நிருபமாதேவி ஆவார். அவர்களின் 9 குழந்தைகளில் 5 ஆண்பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர் சச்சின் தேவ் பர்மன் ஆவார். இவரது இரண்டாவது அகவையில் தாயார் காலமானார்.
கல்வி
[தொகு]எஸ். டி. பர்மன், கோமில்லா விக்டோரியா கல்லூரியில் இளங்கலைபட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டத்தையும் முடித்துள்ளார்.[3]. அதோடு, 1925 முதல் 1930 ஆம் ஆண்டு வரை இசைக்கலைஞர் கே.சி டேவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1932 ஆம் ஆண்டு, பீசமதேவ் சட்டோபதயா என்பவரின் அறிவுறுத்தலின்படி கைஃபா பாதால் கான் (சாரங்கி கலைஞர்), அகர்தலாவில் உள்ள உசுதாத் அல்லாவுதீன் கான், உசுதாத் பாதல் கான் ஆகியோரின் கீழும் பயிற்சிகள் மேற்கொண்டார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
[தொகு]- 1934: தங்க பதக்கம் வங்காளம் அகில இந்திய இசை மாநாட்டில் கல்கத்தா.
- 1934,1958: சங்கீத நாடக விருது.
- 1958: ஆசியா திரைப்பட சொசைட்டி விருது.
தேசிய திரைப்பட விருதுகள்
[தொகு]- 1969: சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது.
- 1974: சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது: ஜிந்தகி ஜிந்தகி.
- 1969: நாட்டுப்புற இசை மீது பத்ம சிறீ சர்வதேச யூரி.
பிலிம்பேர் விருதுகள்
[தொகு]- 1954: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: டாக்சி டிரைவர்
- 1973: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: அபிமான்
- 1959: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: சுஜாதா: பரிந்துரை
- 1965: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: கையேடு: பரிந்துரை
- 1969: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: ஆராதனா: பரிந்துரை
- 1969: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: தலாஷ்: பரிந்துரை
- 1974: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: பிரேம் நகர்: பரிந்துரை
மறைவு
[தொகு]1975ஆம் வருடம் அக்டோபர் 31 ஆம் நாள், இந்தியாவின் மகாராட்டிர மாநிலம், மும்பையில் தனது 69 வது அகவையில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://mympsc.com/Article.aspx?ArticleID=374/ 520போது அறிவு கேள்விபதிலிருந்து|67வது வரிசையில்|அறியப்பட்டது|நாள்:30-09-2015
- ↑ Cultural Correspondent. "Sachin Dev Burman: Epitomising the East Bengali lilt". thedailystar.net. The Daily Star. Retrieved 29 May 2015.
{{cite web}}
:|last1=
has generic name (help) - ↑ Tripura Genealogy at Queensland Univ|இணையம் காணல்: சனவரி 16 2016