எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி
எஸ் கே பி பொறியியல் கல்லூரி | |
குறிக்கோளுரை | Knowledge is Power |
---|---|
வகை | தனியார் சுயநிதி |
உருவாக்கம் | 1999 |
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
தலைவர் | கே. கருணாநிதி |
முதல்வர் | முனைவர் வி. சுப்பிரமணிய பாரதி |
பணிப்பாளர் | சி. குமார் (கல்வியாளர்) முனைவர் எம். சந்திரசேகர் (ஆய்வு மற்றும் வளர்ச்சியின் இயக்குநர்) பேரா எட்வர்ட் அந்தோணி (பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான இயக்குநர்) |
அமைவிடம் | , , 12°13′12″N 79°4′12″E / 12.22000°N 79.07000°E |
வளாகம் | 35 ஏக்கர்கள் (0.14 km2) |
சுருக்கப் பெயர் | SKPEC |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.skpec.in/ |
எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி (SKP Engineering College) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை, சின்னகாங்கியனூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றிவாழும் கிராமப்புற மக்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் நோக்குடன் 1999 ஆம் ஆண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. [1] [2]
எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியானது ஒரு சுய நிதிக் கல்லூரி ஆகும். இது ஸ்ரீ எஸ். குப்புசாமி நினைவு கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது . இந்த கல்லூரிக்கு புது தில்லியின் ஏ.ஐ.சி.டி.இ ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி முதலில் 240 மாணவர்களுடன் பி.இ / பி.டெக் படிப்புகளை வழங்கத் தொடங்கியது. இப்போது ஏழு பி.இ / பி.டெக் பாடங்கள் மற்றும் ஏழு முதுநிலை படிப்புகளும் வழங்கிவருகிறது. இக்கல்லூரியானது ஆண்டுக்கு 810 மாணவர் சேர்க்கைகான அங்கீகரிகாரம் பெற்றுள்ளது. [3]
படிப்புகள்
[தொகு]எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியானது மாணவர்களுக்கு பல்வேறு பொறியியல் படிப்புகளை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இங்கு வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு:
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
- பி.இ.மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. குடிசார் பொறியியல்
- பி.இ. வான்வெளிப் பொறியியல்
- பி.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- எம்.இ. கணினி அறிவியல்
- எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு
- எம்.இ. உட்பொதிக்கப்பட்ட கணினி வடிவமைப்பு
- எம்.இ. ஆற்றல் அமைப்பு பொறியியல்
- எம்.இ. பொறியியல் வடிவமைப்பு
- எம்பிஏ- முதுநிலை வணிக மேலாண்மை
குறிப்புகள்
[தொகு]- ↑ "S.K.P. Engineering College, Tiruvannamalai, Tiruvannamalai - location map / route map of Institute of Technology / Engineering College College Tamilnadu". Collegesintamilnadu.com. Archived from the original on 2012-03-20. Retrieved 2012-05-23.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-08-20. Retrieved 2016-06-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "About SKPEC". SKP Engineering College. Archived from the original on 25 June 2013. Retrieved 8 August 2013.