உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். எம். பாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எம். பாக்கர்
தாய்மொழியில் பெயர்எஸ். எம். பாக்கர்
தேசியம்இந்தியர்
பணிஊடகவியலாளர்

எஸ். எம். பாக்கர்(ஆங்கில மொழி: S.M.Backer) என்பவர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் வின் தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரும் ஆவார். இவர் உடல் நலக்குறைவால் 2024 ஜூன் 20 சென்னையில் காலமானார்.[1]

இளமைக் காலம்[தொகு]

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இவர் முதுநிலை கலைப்பட்டம் பெற்றவர்.

சமூகச் செயல்பாடுகள்[தொகு]

இசுலாமியர்களுக்கான உரிமைகளைக் கேட்டு போராடி 1995 இல் தடா சட்டத்தில் கைதானார்.[2] இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்தார்.

அமைப்புகள்[தொகு]

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர், தமுமுகவின் மாநில பொருளாளராகச் செயல்பட்டவர். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் சிலரோடு தனியாகப் பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை நிறுவினார். பின்னர் அதிலிருந்து விலகி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை நிறுவி அதன் தலைவராக பொறுப்பு வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._பாக்கர்&oldid=4034288" இலிருந்து மீள்விக்கப்பட்டது