எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம்
Appearance
எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம் என்பது சென்னையை அடுத்து, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ். ஆர். எம். பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்ச் சங்கம் ஆகும்.[1][2] இது 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் முனைவர் த. இரா. பச்சமுத்து தமிழ்ப்பேராயத்தின் புரவலராகவும், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ தலைவராகவும் உள்ளார்.
தமிழ்ப் பேராய விருதுகள்
[தொகு]தமிழ்ப்பேராயத்தின் பல்வேறு திட்டங்களில் ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் ஆகும். 2012 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கும் ஆண்டாகத் தொடங்கியது. ரூபாய் 19 இலட்சங்கள் ரொக்கப் பரிசு, பாராட்டுப்பத்திரம், நினைவுக்கோப்பை, முதலியன அடங்கிய மொத்தம் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழ்ப்பேராயத்தின் பிற பணிகள்
[தொகு]- கணினிப் பயன்பாட்டுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்குவது.
- அரிய நூல்கள், ஆய்வுநூல்கள், அகராதிகள், மொழிபெயர்ப்புகள், சிறந்தநூல்கள் ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவது.
- தமிழ் அருட்சுனைஞர், ஓதுவார், பட்டயப் படிப்பு மற்றும் பயிற்சி வழங்குதல்.
- புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமுறைகளுக்கு தமிழ் மொழி கற்பித்தலுக்குப் பாடநூல்கள் தயாரித்தல், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சி வழங்குதல்.
- சாதனைத் தமிழர்களை அழைத்துப் பாராட்டுவது.
- எதிர்காலச் சாதனையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து ஆதரவளிப்பது.
- தமிழ்மொழி மேம்பாடு கருதி கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், மாநாடுகள், ஆய்வரங்குகள், சான்றிதழ்-பட்டய-பட்டப் படிப்புகள் நடத்துதல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்ப்பேராயம் விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஜுன் 15 வரை அவகாசம் : எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2021-05-29. Retrieved 2025-02-14.
- ↑ "SRM Tamil Perayam to hold state-level elocution". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2025-02-14.
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ்ப்பேராய மையப்பணிக்குழு - ஆசிரியர்குழு பரணிடப்பட்டது 2013-01-26 at the வந்தவழி இயந்திரம்
- http://www.srmuniv.ac.in/tamilperayam/menthamizh_cd_inner.html பரணிடப்பட்டது 2014-08-11 at the வந்தவழி இயந்திரம்
- Tamil Perayam -SRM University/Award Function
- Tamil Perayam releases books in Tamil and English