எளிய ஆங்கிலம்
எளிய ஆங்கிலம் (Plain English) என்ற ஆங்கில சொற்கூறு "சாதாரண மனிதனின் ஆங்கிலசொற்கள்” (layman's terms) என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரண மனிதனுக்கும் முடிந்தவரை விரைவாகவும், எளிதாகவும், முழுமையாகவும் உபயோகப்படுத்தும் வகையில் தேவையான சொற்களை கொண்டு இந்த சொற்கூறு வடிவமைக்கப்பட்டு உள்ளது. படிக்கவும், புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் எளிதாக இருக்க, இந்த சொற்கூற்றின் வடிவம் முயற்சிக்கிறது. பொதுவாக அரிதான சொற்களைப் பயன்படுத்துவதை இந்த சொற்கூறு தவிர்க்கிறது. கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்றதாக இது இருக்கும். மேலும் ஒரு தலைப்பைத் தெரிந்துகொள்ள உதவும் நல்ல புரிதலை இந்த சொற்கூறு அனுமதிக்கிறது.[1]
திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்க, பல நாடுகளின் பொது நிறுவனங்கள் எளிய மொழியைப் பயன்படுத்துவதை சட்டங்களின் மூலம் கட்டாயப்படுத்துகின்றன. எனவே ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் போது எளிய ஆங்கில மொழியைப் பயன்படுத்த தேவையுள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]எளிய ஆங்கிலம் என்ற இந்த சொற்கூறு, 16 ஆம் நூற்றாண்டின் "எளிய ஆங்கிலத்தில்" ("in plain English") என்ற பழமொழியின் விளக்கமான "தெளிவான, நேரடியான ஆங்கிலமொழியில்" என்பதிலிருந்து உருவானது.[2] இந்த சொற்கூற்றின் மற்றொரு பெயரான "சாதாரண மனிதனின் சொற்கள்” என்பது "சாதாரண மனிதனின் சொற்களில்" ("in layman's terms") என்ற பழமொழியிலிருந்து பெறப்பட்டது. ஆங்கில மொழியில் சிறப்புத்திறமை இல்லாத ஒரு சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு எளிமையான சொற்கூற்றை இது குறிக்கிறது.
வரலாறு
[தொகு]ஐக்கிய இராச்சியம்
[தொகு]1946 இல், எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல், " அரசியல் மற்றும் ஆங்கில மொழி " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில் அவர் "அழகற்ற மற்றும் துல்லியமற்ற" சமகால எழுதப்பட்ட ஆங்கிலத்தின் ஆபத்துகளை விமர்சித்தார். கட்டுரை குறிப்பாக அரசியல் என்ற தலைப்பில் கவனம் செலுத்துகிறது.அதில் "Pacification" என்ற சொற்கூறு வழக்கமாக "அமைதிப்படுத்துதல்" என்று பொருள்படும். ஆனால் இதே சொற்கூறு "மயான அமைதிப்படுத்துதல்" என்றும் நேர் எதிர் பொருளில் உபயோகப்படுத்தப்படலாம் என்பதை உதாரணங்களின் மூலம் சுட்டிக் காட்டினார்; "பாதுகாப்பற்ற கிராமங்கள் காற்றில் இருந்து குண்டுவீசித் தாக்கப்படுகின்றன, குடிமக்கள் கிராமப்புறங்களுக்குத் துரத்தப்படுகின்றனர், கால்நடைகள் இயந்திரத் துப்பாக்கி ஏந்தியவர்களால் சுடப்படுகின்றன , தீக்குளிக்கும் தோட்டாக்களால் குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன".
"ஆடம்பரமான மற்றும் அதிக விரிவான எழுத்துக்களைத் தவிர்ப்பது" குறித்த வழிகாட்டியை வழங்குமாறு சர் எர்னஸ்ட் கோவர்ஸ் என்பவரை HM கருவூலம் 1948 ஆம் ஆண்டில் கேட்டுக் கொண்டது. அதில் "எழுத்து என்பது கருத்துக்களை ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதிற்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு கருவியாகும்; எழுத்தாளரின் பணி, தனது வாசகனை உடனடியாகவும் துல்லியமாகவும் தனது பொருளைப் புரிந்துகொள்ள வைப்பதாகும்" [3] என்று அவர் எழுதினார்.
ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கான எளிய சொற்கூறுகளைக் கொண்ட வழிகாட்டியாக மெல்லிய காகித அட்டை வடிவத்தில் கோவர்ஸின் கையேடு 1948 இல் "ப்ளைன் வேர்ட்ஸ்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் "தி ஏபிசி ஆஃப் ப்ளைன் வேர்ட்ஸ்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது . அதைத் தொடர்ந்து , 1954 இல் இரண்டு புத்தகங்களையும் இணைத்து கடினமான காகித அட்டை வடிவத்தில் "தி கம்ப்ளீட் ப்ளைன் வேர்ட்ஸ்" என்ற பெயரில் அவற்றின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு இந்த புத்தகம் தொடர்ந்து தடையின்றி வெளியாகிக் கொண்டுள்ளது.
மேலும், சட்ட ஆங்கிலம் என்பது ஒரு சிறப்பு பகுதி என்று சர் எர்னஸ்ட் கோவர்ஸ் சுட்டிக் காட்டினார்.
...is a science, not an art; it lies in the province of mathematics rather than of literature, and its practise needs long apprenticeship. It is prudently left to a specialised legal branch of the Service. The only concern of the ordinary official is to learn to understand it, to act as interpreter of it to ordinary people, and to be careful not to let his own style of writing be tainted by it... [4]
சட்ட ஆவணங்கள் எளிமையாக வேண்டும் என்ற எளிய ஆங்கில பிரச்சார இயக்கம் 1979 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அனைவருக்கும் தெளிவான மற்றும் சுருக்கமான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்று இந்த பிரச்சார இயக்கத்தினர் நம்புகிறார்கள். பல அரசாங்கத் துறைகள் மற்றும் பிற உத்தியோகபூர்வ அமைப்புகள் ஆகியோர்களின் ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் வெளியீடுகளுக்கு இந்த பிரச்சார இயக்கம் உதவியுள்ளது. 1999 ஆம் ஆண்டு வெளியான "நுகர்வோர் ஒப்பந்தங்களில் நியாயமற்ற விதிமுறைகள்" என்ற விதிமுறை ஆவணம், "தெளிவான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய" எளிய மொழியின் உபயோகத்தை கட்டாயப்படுத்துகின்றன.
அவசரகால சேவைகள் எப்போதும் எளிய ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று 2005 லண்டன் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை குழு பரிந்துரைத்தது. தேவைக்கும் அதிகமான சொற்களைக் கொண்ட தகவல்கள், தவறான புரிதல்களுக்கு வழிவகுத்து, உயிர் இழப்புகள் நடக்கலாம் என்றும் அது கண்டறிந்தது.
எளிய ஆங்கிலப் பயிற்சி மற்றும் வழங்கல் துறையில், அயர்லாந்தில் முன்னணி நிறுவனமாக "தேசிய வயது வந்தோர் எழுத்தறிவு நிறுவனம்" (National Adult Literacy Agency - NALA) என்பது உள்ளது. பயிற்சி, நடை வழிகாட்டிகள் மற்றும் தொகுப்பு வேலைகள் ஆகியவற்றின் மூலம் எளிய ஆங்கிலத்தைப் பயன்படுத்த பிற நிறுவனங்களையும் மற்றும் அரசாங்கத் துறைகளையும் இந்நிறுவனம் 2005 முதல் ஆதரித்து வந்துள்ளது. வரைவு நிலையிலான எளிய மொழிச் சட்டம் (Draft Plain Language Act) மூலம் இந்நிறுவனம் தனது பரப்புரைப் பணிக்கு, 2019 ஆம் ஆண்டில் பலனைக் கண்டது. ஆனால் பிரெக்ஸிட் விவாதங்கள் மற்றும் கோவிட்-19 தொற்று நோய் பரவுதல் போன்றன வரைவுச் சட்டத்தை தற்போது நிறுத்தி வைத்ததுள்ளது. இந்நிறுவனம் மற்றும் எளிய ஆங்கில மொழி உபயோகத்தை ஆதரிக்கும் பிற வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்த வரைவு சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று நம்புகின்றனர். அனைவரும் தகவல்களை அணுகுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கிறது.
கோவிட்-19 தொற்று நோய் தடுப்பு விதிமுறைகளுக்கு A-Z எளிய ஆங்கில வழிகாட்டி என்ற வழிகாட்டியை இந்நிறுவனம் (NALA) 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உருவாக்கியது. வழிகாட்டியின் தரம் மற்றும் தெளிவை மேம்படுத்த விரும்புவோருக்கு தொடர்ந்து ஆதரவையும் ஆலோசனைகளையும் இது வழங்கி வருகிறது. வளர்ந்து வரும் சர்வதேச எளிய மொழித் தரங்களுக்கு இந்நிறுவனம் தீவிர ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் உள்ளது.
அரசாங்க தகவல் தொடர்புக்கான எளிய மொழி இயக்கம் (Plain Language Movement) அமெரிக்காவில் 1970 களில் தொடங்கியது. காகிதப்பணிக் குறைப்புச் சட்டம் (Paperwork Reduction Act) 1976 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்க ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றத் தேவையான நிர்வாக உத்தரவுகளை ஜனாதிபதி கார்ட்டர் 1978 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பல நிறுவனங்கள் எளிய மொழியைக் கட்டாயப்படுத்தும் நீண்டகால கொள்கைகளைக் கொண்டுள்ளன. 2010 இல், எளிய எழுத்துச் சட்டம் (Plain Writing Act) நாடு முழுமைக்குமான தேவையானதாக மாற்றப்பட்டது.
சட்ட வரைதல்
[தொகு]"யு.சி.எல்.ஏ ஸ்கூல் ஆஃப் லா" (UCLA School of Law) என்ற பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான "டேவிட் மெலின்காஃப்" எழுதிய "தி லாங்குவேஜ் ஆஃப் தி லா" என்ற புத்தகத்தின் மூலம், அமெரிக்க சட்டம் வரைதல் துறையில் எளிய ஆங்கில இயக்கத்தை 1963 ஆம் ஆண்டு தனியொருவராகத் தொடங்கிய பெருமைக்கு உரியவரானார். நுகர்வோர் ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைகளில் எளிய ஆங்கிலம் தேவைப்படும் சட்டத்தை இயற்றியதின் மூலம் சட்டம் வரைதல் துறையில் முதல் மாநிலமாக நியூயார்க் 1977 ஆம் ஆண்டிலானது. ரிச்சர்ட் வைடிக் என்பவர் வழக்கறிஞர்களுக்கான எளிய ஆங்கிலத்தை 1979 இல் வெளியிட்டார். 1998 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைய (Securities and Exchange Commission - SEC) விதிகளின்படி, பத்திரங்களை பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு எளிய ஆங்கில எழுத்து நடை இப்போது சட்டப்பூர்வ கடமையாக உள்ளது. 2011 இல், எளிமையான மொழி நடவடிக்கை மற்றும் தகவல் பிணையம் (Plain Language Action and Information Network - PLAIN) எளிமையான ஆங்கில மொழி வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
மொழியியலாளரும் சட்டக்கல்லூரி பேராசிரியருமான பீட்டர் டியர்ஸ்மா, 2010 இல் "தடயவியல் மொழியியலின் ரூட்லெட்ஜ் கையேடு" என்ற புத்தகத்தில் "மொழியியலில் ஜூரிகளுக்கான வழிமுறைகள்: கலிஃபோர்னியாவின் நடுவர் மன்ற வழிமுறைகளை மறுவடிவமைத்தல்" என்ற கட்டுரை எழுதினார். குற்றம் சாட்டப்பட்ட நபரின் உண்மை சான்றுகள் , குற்றத்தை தீர்மானிப்பதற்காக வழக்கின் நடுவர் மன்றத்திற்கு பொருத்தமான தகவல்கள் வழங்கும் சூழ்நிலையை உருவாக்குவது போன்ற சட்டப்பூர்வ விசாரணைகளின் வரலாற்றை அவர் கோடிட்டுக் காட்டுகிறார். கலிபோர்னியாவின் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்கிய குழு, நடுவர் மன்ற அறிவுறுத்தல்களை 1930கள் மற்றும் 1940கள் முழுவதும் வடிவமைத்தது .
இந்த தரப்படுத்தப்பட்ட நடுவர் அறிவுறுத்தல்கள் சிக்கலாக இருந்தன. ஏனெனில் அவை எளிய ஆங்கிலத்தில் இல்லாமல் தொழில்நுட்ப மொழியைப் பயன்படுத்தி எழுதப்பட்டன. 1970 களின் பிற்பகுதியில், ராபர்ட் மற்றும் வேதா சாரோ ஆகியோர் நடுவர் மன்ற வழிமுறைகள் குறித்து தனிநபர்களின் புரிதலை அறிய முயற்சித்தனர். மாதிரி நடுவர் மன்ற வழிமுறைகளை வாய்மொழியாக சுருக்கமாகக் கூறுமாறு தனிநபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதன் மூலம்,ஒரு நடுவர் மன்றத்தின் உறுப்பினருக்கு வழங்கப்பட்ட வழிமுறைகள் புரிந்துகொள்வது கடினமாக இருப்பது தெரிந்தது. அங்கீகரிக்கப்பட்ட சொற்களஞ்சியத்தைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை மேலும் திருத்திய பிறகு, புரிதல் 47% ஆக உயர்ந்தது.
சட்ட ஆங்கிலம் மற்றும் எளிய ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் நடுவர் மன்ற அறிவுறுத்தல்களின் எடுத்துக்காட்டுகளை பேராசிரியர் பீட்டர் டியர்ஸ்மா வழங்குகிறார். மோட்டார் வாகனத்தை இயக்கும்போது வாகன ஓட்டிகளின் கவனிப்பு பற்றிய அவரின் வழிமுறைகளை அங்கீகரிக்கப்பட்ட நடுவர் மன்ற அறிவுறுத்தல்களின் புத்தகத்தில் (Approved Jury Instructions - BAJI) படிக்கவும்:
BAJI 5.50. Duty of Motorists and Pedestrians Using Public Highway
Every person using a public street or highway, whether as a pedestrian or as a driver of a vehicle, has a duty to exercise ordinary care at all times to avoid placing himself or others in danger and to use like care to avoid an accident from which an injury might result.
A "vehicle" is a device by which any person or property may be propelled, moved, or drawn upon a highway.
A "pedestrian" is any person who is afoot or who is using a means of conveyance propelled by human power other than a bicycle. The word "pedestrian" also includes any person who is operating a self-propelled wheelchair, invalid tricycle, or motorized quadrangle and, by reason of physical disability, is otherwise unable to move about as a pedestrian, as earlier defined.
இந்த வரையறையில் பயன்படுத்தப்படும் பல குழப்பமான சொற்கள் மற்றும் சம்பிரதாயமான சிறப்பு சொற்கள் போன்றனவற்றை டியர்ஸ்மா சுட்டிக்காட்டுகிறார்; இது நடுவர் மன்ற பங்கேற்பாளர்களுக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கும்; உதாரணத்திற்கு "பாதசாரி" என்பது 'சக்கர நாற்காலிகள் மற்றும் "மோட்டார் பொருத்தப்பட்ட நாற்கரங்களை" (motorized quadrangles) பயன்படுத்தும் தனிநபர்கள் உட்பட' என்று வித்தியாசமாக வரையறுக்கப்படுகிறது. "கலிபோர்னியா நடுவர் மன்ற அறிவுறுத்தல்கள்: குற்றவியல்-கேசி (Judicial Council of California Civil Jury Instructions - CACI)" என்பது இந்த வழிமுறைகளை மறுவேலை செய்தது. அதைப் படிக்கவும்:
CACI 700. Basic Standard of Care A person must use reasonable care in driving a vehicle. Drivers must keep a lookout for pedestrians, obstacles, and other vehicles. They must also control the speed and movement of their vehicles. The failure to use reasonable care in driving a vehicle is negligence.
கேசி (CACI)-யின் வழிமுறைகள் பொதுவான மொழியில் உள்ளன, மேலும் அவை நேரடியானவை. மிகவும் எளிதில் அறியக்கூடிய சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்துவது, சட்டப்பூர்வ சூழ்நிலையில் வழிமுறைகளை துல்லியமற்றதாக மாற்றும் என்று கூறி இந்த அறிவுறுத்தல்கள் விமர்சிக்கப்படுகின்றன.
மருத்துவ எழுத்து
[தொகு]எளிய மருத்துவ மொழியானது, நோயாளிகளை மற்றும் அவர்களின் சுகாதார கல்வியறிவு நிலையை புரிந்து கொள்ள உதவுகிறது. இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (Institute of Medicine) அறிக்கையால் வரையறுக்கப்பட்டபடி, சுகாதார கல்வியறிவு என்பது "பொருத்தமான சுகாதார முடிவுகளை எடுக்க தேவையான அடிப்படை சுகாதார தகவல்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை பெறுவதற்கும், செயலாக்குவதற்கும், புரிந்துகொள்வதற்கும் தனிநபர்களுக்கு எந்த அளவு திறன் உள்ளது என்பதைக் காட்டுகிறது".
ஏப்ரல் 2004 இல், இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (Institute of Medicine - IOM) மற்றும் ஹெல்த்கேர் ரிசர்ச் அண்ட் குவாலிட்டிக்கான ஏஜென்சி (Agency for Healthcare Research and Quality - AHRQ) ஆகியவை சுகாதார கல்வியறிவு அறிக்கைகளை வெளியிட்டன. அவற்றில் 1992 ஆம் ஆண்டு தேசிய வயது வந்தோருக்கான எழுத்தறிவு ஆய்வு (National Adult Literacy Survey - NALS) முடிவுகள், கவலைக்கு காரணமாகக் கூறியது. அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மட்டும் குறைந்த கல்வியறிவு திறன்களை வெளிப்படுத்தியதாக 1992 NALS சுட்டிக்காட்டியது. NALS சுகாதார கல்வியறிவை வெளிப்படையாகப் பார்க்கவில்லை, ஆனால் அது உடல்நலம் தொடர்பான பணிகளை உள்ளடக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சியாளர்கள் சுகாதார கல்வியறிவை அளவிடுவதற்கான முறைகளை உருவாக்கினர்; அது "சுகாதார நடவடிக்கைகள் குறித்தான எழுத்தறிவு அளவு" (Health Activities Literacy Scale - HALS) என்பதாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention - CDC) மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்கள் (National Institutes of Health - NIH) போன்ற பல அரசு நிறுவனங்கள், எளிய மொழியை நடைமுறைப்படுத்துவதற்கும், சுகாதார கல்வியறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தேவையான ஆராய்ச்சி முறைகள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றின் தயாரிப்புகளைத் தொடர்கின்றன.
மருத்துவ சொற்களுக்கு கூடுதலாக அல்லது அதற்கு பதிலாக எளிய மொழியைப் பயன்படுத்துவது, நோயாளிகளுக்கு தகவல் அடிப்படையிலான சுகாதார முடிவுகளை எடுக்க உதவும். இனம் மற்றும் வறுமை போன்ற சமூக பொருளாதார காரணிகளிலிருந்து உயர் சுகாதார கல்வியறிவு பெறுவதிற்கான தடைகள் உருவாகலாம். மருத்துவத் துறையில் எளிய மொழிக்கான சிறந்த நடைமுறைகள் குறித்து, ஆராய்ச்சி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதற்கிடையில், AHRQ-இன் ஹெல்த் லிட்ரசி மேம்பாடு கருவிகள் (Health Literacy Improvement Tools), யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் மெட்லைன் பிளஸ் இணையதளம் (United States National Library of Medicine's MedlinePlus website) மற்றும் CDC இன் எளிய மொழிப் பொருட்கள் மற்றும் வளங்கள் பக்கம் (Plain Language Materials and Resources Page) போன்ற வளமையான ஆதாரங்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளன.
மேலும் பார்க்கவும்
[தொகு]- Simplified Technical English, used by the international aerospace and defense industries
- List of Germanic and Latinate equivalents in English
- Scribes: The American Society of Legal Writers
- எளிய ஆங்கில விக்கிப்பீடியா
- Corporate jargon
- Legalese
- Psychobabble
- Technobabble
- Buzzword
- Weasel word
- Basic English
- New General Service List
- Français Fondamental
- Vocabolario di base (in Italian: Basic Italian)
குறிப்புகள்
[தொகு]மேற்கோள் அடிக்குறிப்புகள்
[தொகு]முழு மேற்கோளையும் பார்க்க மிகை இணைப்பு (hyperlink)-ஐ அழுத்தவும்.
மேற்கோள்கள்
- ^"Plain English".
- ^ Ammer 1997
- ^ Gowers 1954, "Prologue".
- ^ Gowers 1954, "Chapter 2".
- ^ PEUK
- ^ OFT 1999: "A term is open to challenge if it could put the consumer at a disadvantage because he or she is not clear about its meaning – even if its meaning could be worked out by a lawyer."
- ^ BBC News
- ^ The Telegraph
- ^ "Simply put Plain English editing, writing and training service provided by the National Adult Literacy Agency". National Adult Literacy Agency.
- ^ "NALA's Plain English resources page". National Adult Literacy Agency.
- ^ Paperwork Reduction Act of 1995
- ^ Locke 2004
- ^ Plain Writing Act of 2010
- ^ Siegel 2010
- ^ Berent 2010
- ^ Oliver 2000
- ^ Martin 2000
- ^ Moukad 1979
- ^ Sec. Act Rel. 33-7380 1997
- ^ PDF (118 p.)
- ^ Tiersma, Peter (2010). "Instructions to jurors: Redrafting California's jury instructions பரணிடப்பட்டது 2021-08-15 at the வந்தவழி இயந்திரம்" (PDF). The Routledge Handbook of Forensic Linguistics: 251–264. doi:10.4324/9780203855607.ch17. S2CID 184140735. Retrieved 30 March 2019.
- ^ a b c Stableford, Sue; Mettger, Wendy (April 2007). "Plain Language: A Strategic Response to the Health Literacy Challenge". Journal of Public Health Policy. 28 (1): 71–93. doi:10.1057/palgrave.jphp.3200102 PMID 17363939 S2CID 3028132
- ^ Ancker, Jessica S.; Mauer, Elizabeth; Hauser, Diane; Calman, Neil (10 February 2017). "Expanding access to high-quality plain-language patient education information through context-specific hyperlinks" AMIA Annual Symposium Proceedings. 2016: 277–284. PMC 5333247. PMID 28269821.
முழு மேற்கோள்கள்
[தொகு]- "A history of plain language in the United States Government". PlainLanguage.gov. Plain Language Action and Information Network. 1995. Archived from the original on 18 February 2013.
- Ammer, Christine (1997). The American Heritage® Dictionary of Idioms. Houghton Mifflin. Archived from the original on 8 December 2012.
- Berent, Irwin (2010). "Background: Plain Writing Legislative History, 2007-2010". Plain Writing Association. Archived from the original on 17 March 2012. பார்க்கப்பட்ட நாள் 28 March 2013.
- Gardham, Duncan (10 March 2011). "7/7 inquests: emergency services should use plain English". The Telegraph. Archived from the original on 9 December 2013. பார்க்கப்பட்ட நாள் 6 August 2011.
- Gowers, Ernest (1954). The Complete Plain Words. Archived from the original on 23 August 2013.
- "High Court rules against Foxtons". BBC News. May 1, 2011. Archived from the original on 23 October 2014. பார்க்கப்பட்ட நாள் 10 July 2009.
- Martin, Douglas (16 January 2000). "David Mellinkoff, 85, Enemy of Legalese". The New York Times. Archived from the original on 6 March 2013. பார்க்கப்பட்ட நாள் 28 March 2013.
- Mazur, Beth (May 2000). "Revisiting Plain Language". Technical Communication (Society for Technical Communication) 47 (2). http://www.plainlanguage.gov/whatisPL/history/mazur.cfm. பார்த்த நாள்: 29 March 2013.
- Oliver, Myrna (4 January 2000). "David Mellinkoff; Attorney Advocated Plain English". LA Times இம் மூலத்தில் இருந்து 17 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141217054745/http://articles.latimes.com/2000/jan/04/news/mn-50558.
- "Paperwork Reduction Act of 1995". 1995. Archived from the original on 23 திசம்பர் 2017.
- "Plain English Campaign". BBC News. பார்க்கப்பட்ட நாள் 28 March 2013.
- "Plain Writing Act of 2010: Plain Language in Federal Agencies". PlainLanguage.gov. Plain Language Action and Information Network. Archived from the original on 26 January 2011. பார்க்கப்பட்ட நாள் 28 March 2013.
- Wallace, Ann D. (1997). "Securities Act Release no. 33-7380". Plain English Disclosure, proposing release (January 14, 1997) 62 FR 3512 (January 21, 1997). Africa-America-Institute, Annual Institute on Securities Regulation, SEC Division of Corporation Finance. பன்னாட்டுத் தர தொடர் எண் 0195-5756.
{{cite book}}
:|journal=
ignored (help) - Siegel, Joel (17 அக்டோபர் 2010). "Obama Signs 'Plain Writing' Law". ABC News. Archived from the original on 8 ஏப்பிரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச்சு 2013.
- "What is an unfair term?". The Office of Fair Trading. May 1, 2011. Archived from the original on 10 March 2013. பார்க்கப்பட்ட நாள் 6 August 2011.
- Moukad, Rosemary (1979). "New York's Plain English Law". Fordham Urban Law Journal (The Berkeley Electronic Press) 8 (2): Article 7. http://ir.lawnet.fordham.edu/cgi/viewcontent.cgi?article=1151&context=ulj. பார்த்த நாள்: 30 July 2016.
நூல் பட்டியல்
[தொகு]- Cutts, Martin (1996), The Plain English Guide, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860049-6
- Rook, Fern (1992), Slaying the English Jargon, Society for Technical Communication, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-914548-71-9
- Williams, Joseph M. (1995), Style, Toward Clarity and Grace, University Of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-89915-2
- Wydick, Richard C. (2005) [1979], Plain English for Lawyers (paperback, 5th ed.), Carolina Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59460-151-8
வெளி இணைப்புகள்
[தொகு]- "Federal Plain Language Guidelines", U.S. Plain Language Action and Information Network (PLAIN), (rev. May 2011)
- "A Plain English Handbook", U.S. Securities and Exchange Commission (SEC), Office of Investor Education and Assistance, (August 1998)