உள்ளடக்கத்துக்குச் செல்

எல் .ஏ. கிருட்டிண அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்.ஏ.கிருட்டிண அய்யர்
பிறப்புகேரளா, இந்தியா
பணிமானுடவியலாளர்
வரலாற்றாளர்
அறியப்படுவதுமாணுடவியல் கட்டுரைகள்
பெற்றோர்எல்.கே. அனந்தகிருட்டிண அய்யர்
பிள்ளைகள்எல்.கே.பாலரத்னம், கங்கா பாகீரதி
விருதுகள்பத்ம பூசண்

லட்சுமிநாராயணபுரம் அனந்தகிருட்டிண கிருட்டிண அய்யர் (Lakshminarayanapuram Ananthakrishna Krishna Iyer) ஓர் இந்திய மானுடவியலாளர் ஆவார். மானுடவியல் குறித்த தலைப்புகளில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்[1]. இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் தலைவராக இருந்தார், கேரளாவின் பழங்குடி மற்றும் அட்டவணை சாதி மக்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். குறிப்பிடத்தக்க மானுடவியலாளரும் இவரது தந்தையுமான எல்.கே. அனந்தகிருட்டிண அய்யர் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியே இவரது ஆய்வுகளாகும்[2]. இந்திய மானுடவியல்[3], இரண்டு தொகுதிகளாக எழுதப்பட்ட கேரளாவின் சமூக வரலாறு என்ற வரலாற்று ஆய்வு நூல்கள்[4], மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட தென் கேரள பழங்குடிகள் தொடர்பான திருவாங்கூர் பழங்குடிகள் மற்றும் சாதிகள் என்ற நூல் போன்றவை[5] இவர் ஆங்கிலமொழியில் எழுதிய குறிப்பிடத்தக்க சில நூல்களாகும். அறிவியல் பங்களிப்பிற்காக இந்தியாவில் வழங்கப்படும் மூன்றாவது மிகவுயர்ந்த விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது[6]. இவரது மகன் எல்.கே.பாலரத்னமும் ஓர் அறியப்பட்ட மானுடவியலாளர் ஆவார்[2]. இவரது மகள் எல்.கே.கங்கா பாகிரதி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப்பொறியாளர் கே.ஏ.சீத்தாராமனின் மனைவியாவார். சென்னை உள்ளுர் வலையமைப்பின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பிரிவு வழங்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சிறந்த பங்களிப்புகளுக்கான 2016-2017 ஆம் ஆண்டுக்கான இளம் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் சீத்தாராமன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Listing on WorldCat". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
  2. 2.0 2.1 Lalita Prasad Vidyarthi; Binay Kumar Rai (1977). The Tribal Culture of India. Concept Publishing Company. pp. 58–. GGKEY:WY79CWZYNC2.
  3. L. A. Krishna Iyer and L. K. Bala Ratnam (1961). Anthropology in India. B. V. Bhavan. p. 257. இணையக் கணினி நூலக மைய எண் 639869627.
  4. L. A. Krishna Iyer (1968). Social History of Kerala. Book Centre Publications.
  5. K. Jose Boban (1 January 1998). Tribal Ethnomedicine: Continuity and Change. APH Publishing. pp. 318–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-027-7.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்_.ஏ._கிருட்டிண_அய்யர்&oldid=3586352" இலிருந்து மீள்விக்கப்பட்டது