எலும்புக் கட்டி
எலும்புக் கட்டி (Osteoma) என்பது எலும்புத் திசுக்களின் புது வளர்ச்சி (Neoplasm) ஆகும். ஆஸ்டியோமா எனும் எலும்பில் தோன்றும் இந்த வீக்கம் புற்று அன்று. பிற இடங்களுக்கு பரவாது என்றாலும் அழுத்தம் காரணமாக வலி ஏற்படும். ஆனால் எலும்புப் புற்றுநோய் (Osteosarcoma ) அதிக வலியினைக் கொடுக்கும். பிற இடங்களுக்கும் பரவும். கதிர்மருத்துவம், வேதிமருந்துகள் எல்லாம் அதிக பயன்படாது. முழுமையாகக் புற்று காணப்படும் பகுதியினை அறுவை மூலம் களைவதே நல்ல பயனைக் கொடுக்கிறது. எலும்பில் காணப்படும் புற்றுநோய் பெரும்பாலும் தொலைபரவல் (Metastatic ) காரணமாகத் தோன்றுகின்ற துணைப் புற்றாகவே (Secondary T) உள்ளன.
எலும்புப் புற்றுநோய் அறிகுறிகள்-முக்கியமாக எலும்பில் வலி ஏற்படும்.குறிப்பாக இரவுநேரங்களில் மோசமான அதிக வலி உருக்கும்.கால் முட்டி, தொடை, விலாஎலும்பு,இடுப்பு எலும்பு வலிகள் கவனிக்கப்பட வேண்டும்.வீக்கமும் காய்ச்சலும் இருக்கும்.வளக்கமுடியாத நடை தளர்வு ஏற்படுவதுண்டு. குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் வளர்ச்சியின் அறிகுறிகள் என உதாசீனப்படுத்துவதால் நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது.வலியைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய குழந்தைகளிடம் ,நோய் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் போதுதான் தெரியவருகிறது. நோய் காணல்-சிறப்பு மருத்துவக் குழுவினரி துணையுடன் நோய் கண்டு கொள்ளப்படுகிறது.புற்றுநோய் தொடர்புடைய அத்தனை மருத்துவர்களும் இக்குழுவில் இடம் பெறுவர்.நோயிளியைப் பற்றிய முழு விவரமும் நோயாளியின் முழு உடல் பரிசோதனையும் செய்யப்பட வேண்டுவது மிகவும் முக்கியம்.குருதி, சிறுநீர் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.முழு எலும்புத் தொகுதியும் நுரையீரலும் சிறப்பாக ஆராயப்ப படவேண்டும்.முறிவு ஏற்பட்ட பகுதி கவனிக்கபட வேண்டும். எலும்புத் திசு பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். நோயினை உறுதி செய்ய இது மிகவும் அவசியமாகும். அறுவை மருத்துவமே சிறந்த்து.எலும்பு புற்றினை அழிக்க மிகவும் அதிக கதிர் ஏற்பளவினைக் கொடுக்க வேண்டியதாக உள்ளது.மருந்துகளும் உள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- BoneTumor பரணிடப்பட்டது 2012-07-22 at the வந்தவழி இயந்திரம்
- radio/498 at eMedicine - Osteoid osteoma
- derm/301 at eMedicine - Osteoma cutis
- Humapth #4724 (Pathology images)