எர்னஸ்ட் கர்கென்டல்
Appearance
பிறப்பு | East Jordan, Michigan, USA | சூலை 6, 1914
---|---|
இறப்பு | ஆகத்து 22, 2005 அலெக்சாண்ட்ரியா, விர்ஜினா | (அகவை 91)
தேசியம் | அமெரிக்கர் |
Alma mater | வெய்ன் இசுடேட்டு பல்கலைக்கழகம் மிச்சிகன் பல்கலைக்கழகம் |
அறியப்பட்டது | கர்கென்டல் விளைவு |
எர்னஸ்ட் ஆலிவர் கர்கென்டல் (Ernest Oliver Kirkendall) (ஜூலை 6, 1914 - ஆகஸ்ட் 22, 2005 [1] [2] ) ஒரு அமெரிக்க வேதியியலாளர் மற்றும் உலோகவியலாளர் ஆவார். கர்கென்டல் விளைவை 1947 ஆம் ஆண்டு கண்டுபிடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
வாழ்க்கை மற்றும் பணிகள்
[தொகு]இவர் மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பார்க் என்ற இடத்தில் வளர்ந்தார். மற்றும் வெய்ன் இசுடேட்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவரது முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் பணிக்கான முனைவர் பட்டப் படிப்புகளை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். ஆனால், இவர் வெய்ன் இசுடேட்டு பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் பாடம் கற்பித்தார். 1984 ஆம் ஆண்டில் இவர் பொறியியல் கல்லூரியின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவர் வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ Kalte, Pamela M.; Nemeh, Katherine H., eds. (2003). American Men & Women of Science (21st ed.). Detroit: Thomson/Gale. p. 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7876-6527-4.
- ↑ "Wayne State University obituary". Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.