உள்ளடக்கத்துக்குச் செல்

எர்காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/கிளாவிசெப்சு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
எா்காட்
Ergot
கிளாவிசெப்சு பர்பூரியா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): கிளாவிசெப்சு
இனங்கள்

50 இனங்கள் பின்வருமாறு:
Claviceps africana<br/ Claviceps fusiformis
Claviceps paspali
Claviceps purpurea
Claviceps sorghi
Claviceps zizaniae
Claviceps lutea

எர்காட் (Ergot) அல்லது எர்காட் பூஞ்சை என்பது கிளாவிசெப்ஸ் இனத்தைச் சேர்ந்த பூஞ்சைகளின் குழுவைக் குறிக்கிறது.[1]

கிளாவிசெப்சு பர்பூரியா ("கம்பு எர்காட் பூஞ்சை") என்பது இந்தக் குழுவின் முதன்மை வாய்ந்த பூஞ்சை இனமாகும். இந்த பூஞ்சை, புல்லரிசி, கம்பு, அதனோடு தொடர்புடைய பிற தாவரங்களில் வளர்கிறது. இந்தப் பூஞ்சை உருவாக்கும் எர்காட் சிலரோட்டியம் எனப்படும் மாசுபட்ட கூலப் பழக் கட்டமைப்பில் அமையும் ஆல்கலாய்டுகளை உட்கொள்ளும் மனிதர்களிலும் பிற பாலூட்டிகளிலும் எர்கோடிசத்தை ஏற்படுத்தும்.[2][3]

கிளாவிசெப்சு பேரினத்தின் எர்காட்டில் 50 அறியப்பட்ட இனங்கள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. புற்களிலும் கூலங்களிலும் ஒட்டுண்ணியாக வாழும் சி. பர்பூரியா , கம்பிலும் பஃபெல் புற்களிலும் வாழும் சி. பியூசிபார்மிசு , தால்லிசு புற்களில் வாழும் சி. பாசுபலி , சி. ஆப்பிரிக்கானா [4],(சோள ஒட்டுண்ணி), சி. லூட்டியா (பாசுபலத்தின் ஒட்டுண்ணி).[5] ஆகியவை இந்த இனங்களில் பொருளியலாகக் குறிப்பிடத்தகுந்தவை. சி. பர்பூரியா மிக வழக்கமாக திறந்த பொலன்சேர்க்கை இனங்களாகிய புல்லரிசி, (இது தான் மிக வழக்கமான ஓம்புயிரி), திரைட்டிகேல், கோதுமை, வாற்கோதுமை ஆகியவற்றைத் தாக்குகிறது. இது மிக அருகலாகவே காடைக்கண்ணி இனத்தைத் தாக்கும்.

சி. பர்புரியாவில் குறைந்தது மூன்று இனங்கள் அல்லது வகைகள் உள்ளன, அவை தம் ஓம்புயிர் வாழ்க்கையின் அடிப்படையில் வேறுபடுகின்றன:[6]

  • G1 — திறந்த புல்வெளிகள் மற்றும் வயல்களின் நிலப் புற்கள்;
  • G2 — ஈரப்பத, காடு, மலை வாழ்விடங்களின் புற்கள்;
  • G3 ( புர்புரியா வகையான இசுபார்தினே) — உப்பு சதுப்புப் புற்கள் ( இசுபார்த்தினா, திசுட்டிச்சிலிசு ).

எா்காட் பயன்கள்-

[தொகு]

1.எா்காட்டிலிருந்து எடுக்கப்படும் எா்கோமெட்ரின் மருத்துவத்தில் பயன்படுகிறது.

2.கருப்பையிலுள்ள குருதிக்குழல்களைச் சுருக்கி, மகப்பேற்றுக்குப் பின் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதை அது தடுக்கிறது.

தீமைகள்-
[தொகு]
  • இயங்கு தசைகளை அதிகமாக இயக்கும்.
  • அண்ணீரகச் சுரப்பைக் க்ட்டுப்படுத்தும்.
  • lsd என்ற போதை மருந்து தயாாிக்கப்படுகிறது.
  • இதை உட்கொண்டால் வலிப்பு , மன அழுத்த நோய் உண்டாகும்.
  • இதற்கு குருதிக்குழல்களைச்ச் சுருக்கும் தன்மை இருப்பதால் காங்கிரீன் என்ற நோய் உருவாகலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schardl, Christopher L.; Panaccione, Daniel G.; Tudzynski, Paul (2006). Ergot Alkaloids – Biology and Molecular Biology. The Alkaloids: Chemistry and Biology. Vol. 63. pp. 45–86. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S1099-4831(06)63002-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-469563-4.
  2. ergot பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், online medical dictionary
  3. ergot பரணிடப்பட்டது செப்டெம்பர் 10, 2009 at the வந்தவழி இயந்திரம், Dorland's Medical Dictionary
  4. Bandyopadhyay, Ranajit; Frederickson, Debra E.; McLaren, Neal W.; Odvody, Gary N.; Ryley, Malcolm J. (April 1998). "Ergot: A New Disease Threat to Sorghum in the Americas and Australia". Plant Disease 82 (4): 356–367. doi:10.1094/PDIS.1998.82.4.356. பப்மெட்:30856881. 
  5. Stoll, A. (October 1932). "Ergot and ergotism". The Science of Nature 20 (41): 752–757. doi:10.1007/BF01493390. Bibcode: 1932NW.....20..752S. 
  6. Sylvie Pazoutova. "Intraspecific variability of C. purpurea". Archived from the original on 2006-03-10.[self-published source?]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்காட்&oldid=3928211" இலிருந்து மீள்விக்கப்பட்டது