உள்ளடக்கத்துக்குச் செல்

எரவிகுளங்கரா பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரவிகுளங்கரா பகவதி கோயில் இந்தியாவின் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். இக்கோயில் சிவன் மற்றும் அய்யப்பனுக்கு அமைக்கப்பட்ட கோயிலாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

காலடிக்கும் ஆலுவாவுக்கும் இடையில் அகபரம்பு கிராமத்தில் அமைந்துள்ளது. நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 47 இல் உள்ள காரியத் சந்திப்பிலிருந்து 500 மீட்டர் தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

தோற்றம்

[தொகு]

இக்கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது எனவும், அடர்ந்த காடுகளுக்கு இடையில் எனவும், தேவியின் பிரசன்னம் இங்கு காணப்பட்டது எனவும் அஸ்டமாங்கல்ய பிரசன்னம் கூறுகிறது. வில்வமங்கலம் சுவாமிக்கு இத்தலத்தில் தேவியின் தரிசனம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. ஆதலால் கோயில் உள்ள குன்றானது திருவிழும்குன்னு என்றும் அழைக்கப்படுகிறது.

பின்னர் சிவன், சாஸ்தா (அய்யப்பன்) ஆகியோர் அங்கு காணப்பட்டனர். பக்தர்கள் அவர்களையும் வணங்கத் தொடங்கினர். 2007ஆம் ஆண்டு தாம்பூல பிரசன்னம் நடத்தப்பட்டது. கோயிலில் பிரம்மராட்டசசர்கள். நாக சர்ப்பம் ஆகியவற்றை அமைக்க அவசியம் எழவே, தாந்திரிய சடங்கு அக்டோபர் 2008 இல் மேற்கொள்ளப்பட்டு அவை அமைக்கப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]