எயிற்றியனார்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எயிற்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. இவர் பாலை நிலப் பெண் எயிற்றி ஒருத்தியை மணந்துகொண்டு வாழ்ந்து வந்தமையால் இவரை மக்கள் எயிற்றியனார் என்றனர்.
பாடல்
[தொகு]உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்க் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முருவலொடு மதைஇய நோக்கே.
-குறுந்தொகை 286
பாடல் தரும் செய்தி
[தொகு]அவன் அவளிடம் கெஞ்சுகிறான். அவள் வெளிப்படையாகப் பல்லைக் காட்டிச் சிரிக்கிறாள். என்றாலும் அவள் தன் அழகு மதமதப்போடு பார்க்கிறாள். இதனை நினைத்து நினைத்து மகிழலாம்.