உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஜி. ஆர் நகர்

ஆள்கூறுகள்: 13°02′06″N 80°11′49″E / 13.035°N 80.197°E / 13.035; 80.197
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.ஜி.ஆர் நகர்
அருகில்
எம்.ஜி.ஆர் நகர் is located in சென்னை
எம்.ஜி.ஆர் நகர்
எம்.ஜி.ஆர் நகர்
எம்.ஜி.ஆர் நகர் is located in தமிழ் நாடு
எம்.ஜி.ஆர் நகர்
எம்.ஜி.ஆர் நகர்
எம்.ஜி.ஆர் நகர் is located in இந்தியா
எம்.ஜி.ஆர் நகர்
எம்.ஜி.ஆர் நகர்
ஆள்கூறுகள்: 13°02′06″N 80°11′49″E / 13.035°N 80.197°E / 13.035; 80.197
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
மாநகரம்சென்னை
வார்டு137 & 138
பெயர்ச்சூட்டுதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (திரு எம்.ஜி. ராமச்சந்திரன்)
அரசு
 • நிர்வாகம்சென்னை மாநகராட்சி
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
மக்களவை தொகுதிதென் சென்னை
சட்டமன்ற கீழவை தொகுதிவிருகம்பாக்கம்
திட்டம் முகமைசென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்
நகர முகமைசென்னை மாநகராட்சி
இணையதளம்www.chennai.tn.nic.in

எம். ஜி. ஆர் நகர்(M.G.R. Nagar) என்பது எம்.ஜி. ராமச்சந்திரன் நகரின் என்பதன் சுருக்கமாகும். எம்.ஜி.ஆர் நகரானது இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு சுற்றுப் பகுதியாகும்.[1] இங்கு காய்கறி சந்தையும் மீன் சந்தையும் உள்ளது.[2]

அமைவிடம்

[தொகு]

எம்ஜிஆர் நகரானது சென்னை கே. கே. நகரில் அண்ணா பிரதான சாலையின் தெற்கே அமைந்துள்ளது. இந்நகரானது வடக்கில் கே.கே.நகர், மேற்கில் நெசப்பாக்கம், தெற்கில் அடையாறு மற்றும் தென்கிழக்கில் ஜாஃபர்கான் பேட்டை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

போக்குவரத்து

[தொகு]

கே. கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து மாநகரப் பேருந்துகளும் எம்ஜிஆர் நகரின் மூன்று பேருந்து நிறுத்தங்களான எம்ஜிஆர் நகர் சந்தை, டேட்டா உடிபி நிறுத்தம் மற்றும் அஜந்தா நிறுத்தம் ஆகியவற்றில் நின்று செல்லும். மேலும் அண்ணா பிரதான சாலையின் வழியாகவும் செல்கின்றன.[3] அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டர் சந்திப்பில் இருந்து இந்தப் பகுதிக்கு பகிர்வூர்திகள் இயங்குகின்றன.

பொதுச் சேவைகள்

[தொகு]

எம்ஜிஆர் நகரின் காவல் நிலையமானது (R10) வெங்கட்ராமன் சாலையில் அமைந்துள்ளது.[4]

நிகழ்வுகள்

[தொகு]

2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 4000 பேர் கூடிய அந்த நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "For residents of MGR Nagar, a Black Sunday". தி இந்து. 19 December 2005 இம் மூலத்தில் இருந்து 11 January 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080111081949/http://www.hindu.com/2005/12/19/stories/2005121913050400.htm. 
  2. "Residents appeal for public health centre". The Hindu. 31 July 2011. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article2309749.ece. 
  3. V. Soundararani (27 November 2008). "Corporation removes encroachments on Anna Main Road". Arcot Road Times இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111006012029/http://arcotroadtimes.com/2008/11/corporation-removes-encroachments-on-anna-main-road/. 
  4. Shoba Srikanth (2 April 2010). "MGR Nagar police officers host meeting with residents". Arcot Road Times இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303223753/http://arcotroadtimes.com/2010/04/mgr-nagar-police-officers-host-meeting-with-residents/. 
  5. "42 killed in Chennai stampede". தி இந்து. 19 December 2005 இம் மூலத்தில் இருந்து 21 December 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051221050623/http://www.hindu.com/2005/12/19/stories/2005121912500100.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜி._ஆர்_நகர்&oldid=4108629" இலிருந்து மீள்விக்கப்பட்டது