உள்ளடக்கத்துக்குச் செல்

எம். அப்துல் காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எஸ். அப்துல் காதர் (M. Abdul Kader) (1932 - 2009) முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் சென்னை மேயராகவும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

திசம்பர் 1959 இல் சென்னை மாநகராட்சியில் பெரும்பான்மை இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வென்றபோது, காதர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டில், மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.

இறப்பு

[தொகு]

அக்டோபர் 3, 2009 அன்று, எம். எஸ். அப்துல் காதர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அப்துல்_காதர்&oldid=3480459" இலிருந்து மீள்விக்கப்பட்டது