எமி சான் சிரிப்பான்
எமி சான் சிரிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லியோசிச்லா
|
இனம்: | L. omeiensis
|
இருசொற் பெயரீடு | |
Liocichla omeiensis (ரைலி, 1926) |
எமி சான் சிரிப்பான் (லியோசிச்லா ஓமியென்சிசு) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். ஓமி சான் அல்லது சாம்பல்-முகம் கொண்ட சிரிப்பான் என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்தச் சிற்றினங்கள், சீனாவின் தெற்கு சிச்சுவானில் உள்ள மலைத்தொடர்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இது பூகுன் பாடும் பறவையுடன் நெருங்கிய தொடர்புடையது. இது 2006-ல் விவரிக்கப்பட்டது.
எமி சான் சிரிப்பான் என்பது ஆலிவ்-சாம்பல் நிறத்தில் சிவப்பு நிற சிறகு திட்டுகளுடன் கூடிய ஒரு பறவையாகும். முகத்தில் உள்ள இறகுகள் சாம்பல் நிறத்தில் முகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மென்மையான சிவப்பு வளையத்துடன் இருக்கும். இந்த சிற்றினங்கள் மிதவெப்பமண்டல மழைக்காடுகளின் அடிமட்டத்தில் உணவைத் தேடுகின்றன. இது கோடைக்காலத்தில் உயரமான இடங்களுக்குப் புலம்பெயர்ந்து கோடை மாதங்களைக் கழிக்கிறது. கோடையில் 1000 மீட்டருக்கு உயரமான பகுதிகளில் காணப்படும் இப்பறவை குளிர்காலத்தில் 600 மீட்டருக்கு கீழே நகரும் தன்மையுடையது.
எமி சான் சிரிப்பான் பன்னாட்டி இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அபாயகரத்திற்கு உள்ளாகும் சிற்றினமாகக் கருதப்படுகிறது. காடு அழிப்பு மற்றும் விவசாயத்திற்காகக் காடுகளை அழித்தல் போன்ற வாழ்விட இழப்பால் இது அச்சுறுத்தப்படுகிறது. எமி சான் பாதுகாக்கப்பட்ட இயற்கைக் காட்சித் தளத்தில் இவை பாதுகாக்கப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Liocichla omeiensis". IUCN Red List of Threatened Species 2017: e.T22715770A117063025. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22715770A117063025.en. https://www.iucnredlist.org/species/22715770/117063025. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
வெளி இணைப்புகள்
[தொகு]- Birdlife International Bugun Liocichla: வடகிழக்கு இந்தியாவில் ஒரு பரபரப்பான கண்டுபிடிப்பு 12/9/2006 அன்று பரணிடப்பட்டது 2007-07-10 at the வந்தவழி இயந்திரம் இலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது
- பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல் (2006) இனங்கள் உண்மைத்தாள்: லியோசிச்லா ஓமியென்சிஸ் . பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம்�� இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்]]