என் சரித்திரம்
நூலாசிரியர் | உ. வே. சாமிநாதையர் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொருண்மை | தன்வரலாறு |
வெளியிடப்பட்டது | 1950 |
தமிழ் அறிஞர் உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம்[1] எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் சனவரி 1940 முதல் ஏப்ரல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இந்நூல் 1950-ஆம் ஆண்டில் 762 பக்கங்களில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.[2] இந்நூலில் சிறப்பாக தனக்கு தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் செய்யுட்கள் கற்றுக் கொடுத்த தமிழ் அறிஞர்களான சடகோப அய்யங்கார், விருத்தாசல ரெட்டியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாடுதுறை ஆதீனத்தின் மகா சந்நிதானங்கள் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் & அம்பலவாண தேசிகர் மற்றும் தனக்கு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியர் வேலை வாங்கிக் கொடுத்து உதவியவரும், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முன்னாள் மாணவரான சி. தியாகராச செட்டியார் அவர்கள் குறித்தும் விவரித்துள்ளார். மேலும் ஏட்டுச் சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களை அச்சு நூலாகப் பதிப்பிக்கத் தூண்டிய சேலம் இராமசாமி முதலியார், நூல் பதிப்புக்கு உதவிய சமசுகிருத அறிஞர் ம. வீ. இராமானுஜாச்சாரியார், நூல் பதிப்புக்கு பண உதவி நல்கிய பாண்டித்துரைத் தேவர் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி ஆகியோர் குறித்து தனது தன்வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
உ. வே. சாமிநாதையர் தான் தமிழ்நாடு முழுவதும் சென்று சேகரித்த ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு ஆராய்ச்சி போன்ற நூல்களை அச்சில் பதிப்பித்த வரலாற்றை நயம்பட இந்நூலில் எடுத்துரைக்கிறார்.[3]
சனவரி1942ல் உ. வே. சாவின் மறைவால் பாதியில் நின்ற இந்நூலை கி. வா. ஜகந்நாதன் நிறைவு செய்து 1950ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ En Sarithiram: Autobiography of Uttamadhanapuram Venkatasubbaiyer Swaminatha Iyer (U. Ve. Sa)
- ↑ Dr U.V. Swaminatha Iyer. En Sarithiram. ISBN 978-81-8476-462-8.
- ↑ என் சரித்திரம் - ஆசிரியர் உ. வே. சாமிநாதையர் (1990)