உள்ளடக்கத்துக்குச் செல்

என். ரி. வி அலைவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்.ரி.வி அலைவரிசை (N.T.V) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பபட்ட ஆங்கில மொழியிலமைந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.

1982 ஆம் ஆண்டின் இல. 6ம் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் (எஸ். எல். ஆர். சி) தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தால் நவம்பர் 18 2009 ம் திகதி தனியாக ஆங்கில மொழி நிகழ்ச்சிகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்டது.[1] இதனது ஒளிபரப்பினை மேல்மாகாணத்திற்குள் மட்டுமே பார்க்க முடிந்தது. இதன் ஒளிபரப்புப் பட்டியலில் மற்ற எஸ். எல். ஆர். சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படாத நிகழ்ச்சிகளும், ஐ அலைவரிசையின் சில தயாரிப்புகளும் இருந்தன. இது 2015-ம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மூடப்பட்டது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ரி._வி_அலைவரிசை&oldid=3908881" இலிருந்து மீள்விக்கப்பட்டது