உள்ளடக்கத்துக்குச் செல்

என். பி. ஜான்சி லட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். பி. ஜான்சி இலட்சுமி
எட்டாவது மக்களவையில் சித்தூர் தொகுதி உறுப்பினர்
முன்னையவர்பி. இராசகோபால் நாயுடு
பின்னவர்எம். ஞானேந்திர ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-10-20)20 அக்டோபர் 1941
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், India
இறப்பு19 திசம்பர் 2011(2011-12-19) (அகவை 70)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

என். பி. ஜான்சி இலட்சுமி (N.P.Jhansi Lakshmi) (20.10.1941-19.12.2011) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் எட்டாவது மக்களவையில் சித்தூர் தொகுதி உறுப்பினராகவும், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஜான்சி லட்சுமி அக்டோபர் 20 1941 ஆம் ஆண்டு விசாகபட்டினம் என்ற நகரில் சி. கே. சௌத்ரியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் மெட்ரிக்குலேசன் வரை படித்துள்ளார்.[1]

தொழில்

[தொகு]

புதிதாக அமைக்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக, ஜான்சி லட்சுமி 1983 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சித்தூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு 16,434 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரசின் என். பி. வெங்கடேசுவர சௌத்ரியை தோற்கடித்தார்.[2] அடுத்த ஆண்டு, சித்தூரிலிருந்து எட்டாவது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் 3,32,543 வாக்குகளைப் பெற்றார்.[3] இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல திட்டங்களுக்கான பிராந்திய அமைப்பாளராகவும், கஸ்தூர்பா நூற்றாண்டுக் குழுவின் செயலாளராகவும் இருந்தார்.[1] இலட்சுமி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யவில்லை. மக்களவையில் இருந்து விலகினார்.[1][4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஜான்சி லட்சுமி, பி. வீரராகவுலு நாயுடு என்பவரை திசம்பர் 9 1956 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1] மாரடைப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பத்து நாட்களுக்கு பிறகு 19 திசம்பர் 2011 ஆம் ஆண்டு இயறக்கை எய்தினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile: Jhansi Lakshmi, Smt. N. P." Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. "Statistical Report on General Election, 1983 to the Legislative Assembly of Andhra Pradesh" (PDF). Election Commission of India. p. 159. Archived from the original (PDF) on 11 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Statistical Report on the General Elections, 1984 to the Eighth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 25. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  4. Jai, Janak Raj (2003). Presidents of India, 1950-2003. Regency Publications. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87498-65-0.
  5. "Former MLA Dies". The Hindu. 21 December 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/former-mla-dies/article2733431.ece. பார்த்த நாள்: 27 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பி._ஜான்சி_லட்சுமி&oldid=3928164" இலிருந்து மீள்விக்கப்பட்டது