என். கிட்டப்பா
Appearance
என். கிட்டப்பா (N. Kittappa)(பிப்ரவரி 10, 1931) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். மயிலாடுதுறையினைச் சார்ந்த இவர் மயிலாடுதுறை கூறை நாடு பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். இவர் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1967, 1971, 1977, மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக மாயூரம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]