என். அனிருதன்
Appearance
என். அனிருதன் (N. Anirudhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று என். நாராயணன் மற்றும் நானி அம்மா தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டமும் சட்டப் பாடத்தில் இள நிலை பட்டமும் பெற்று வழக்கறிஞரானார். பி. ஆர். சுலேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு இவர் கேரள சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
கேரள மாநில அரசியலில் இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[2] 10 ஆவது மற்றும் 12ஆவது கேரள சட்டமன்றத்தில் சத்தன்னூர் தொகுதியை அனிருதன் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய குழுவிலும் இவர் உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "സിപിഐ കൊല്ലം ജില്ലാ സെക്രട്ടറി എൻ. അനിരുദ്ധൻ തന്നെ; കാനം വിഭാഗത്തിന് തിരിച്ചടി", ManoramaOnline (in மலையாளம்), பார்க்கப்பட்ட நாள் 2023-11-29
- ↑ "CPI march on Tuesday", The Hindu (in Indian English), 2016-11-13, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2023-11-29