உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்மின்னி நகர் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்மின்னி நகர் விளைவு (Electromeric effect) என்பது நிறைவுறா சேர்மங்களில் (>C=C<, >C=O போன்றவற்றைப் பெற்றுள்ள சேர்மங்களில்) தாக்கும் வினைபொருள் முன்னிலையில் நடைபெறும் ஒரு தற்காலிக விளைவாகும்.[1] இந்த விளைவில், பகிர்ந்து கொள்ளப்பட்ட எதிர்மின்னி இணையானது முழுமையாக இடம் பெயர்கிறது. தாக்கும் வினைபொருள் இருக்கும் வரை மட்டுமே இந்த விளைவானது இருக்கும். தாக்கும் வினைபொருள் காரணியானது விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் மூலக்கூறானது தனது பழைய நிலையினை அடைந்து விடும்.[2]

விளக்கம்

[தொகு]

கருக்கவர் பொருளானது, கார்போனைல் சேர்மத்தை அணுகும் போது கார்பன் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கிடையே காணப்படும் எதிர்மின்னிகள் அக்கணத்தில் அதிக எதிர்மின்னி கவர் தன்மை உடைய ஆக்சிசன் அணுவிற்கு மாற்றப்படுகிறது. இதன் காரணமாக, கார்பன் அணுவானது எதிர்மின்னி பற்றாக்குறை தன்மை உடையதாக மாறுகிறது. எனவே, உள்வரும் கருக்கவர் பொருளானது கார்போனைல் கார்பனுடன் புதிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாதகமான சூழல் உருவாகிறது. மாறாக, H+ போன்ற π எதிர்மின்னி கவர்பொருளானது ஆல்க்கீனை அணுகும் போது, எதிர்மின்னிகள் அந்த நேரத்தில் எதிர்மின்னி கவர்பொருளுக்கு மாற்றப்பட்டு கார்பனுக்கும், ஐதரசனுக்கும் புதிய பிணைப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக, மற்றொரு கார்பன் அணுவானது நேர்மின்சுமையடைகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Inductive Effect, Electromeric Effect, Resonance Effects, and Hyperconjugation". Brilliant. Retrieved 19 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Inductive And Electromeric Effects «PreviousNext »". Organicmystery. Retrieved 19 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. [file:///home/chronos/u-775f83202eabecb57a45f21e7481dacfd4c4e282/Downloads/XI%20Std%20Chemistry%20Vol-2%20Tamil%20Medium%20Combined%2015.09.18.pdf மேல்நிலை முதலாம் ஆண்டு வேதியியல் தொகுதி - 2] (PDF). தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2018. pp. 183–184. {{cite book}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்மின்னி_நகர்_விளைவு&oldid=3262655" இலிருந்து மீள்விக்கப்பட்டது