எட்வர்ட் வாரிங்
எட்வர்ட் வாரிங் Edward Waring ![]() | |
---|---|
![]() | |
பிறப்பு | 1736 ஸ்ரயூஸ்பூரி |
இறப்பு | 15 ஆகத்து 1798 Plealey |
கல்லறை | Church of Saint Peter and Saint Paul |
படித்த இடங்கள் | Magdalene College, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
பணி | கணிதவியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், அறிவியலாளர் |
விருதுகள் | அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், கோப்ளி பதக்கம் |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | எண் கோட்பாடு, கணிதம், எண் |
நிறுவனங்கள் | |
முனைவர் பட்ட மாணவர்கள் | John Dawson |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | John Dawson |
எட்வர்ட் வாரிங் (1736 - 1798) ஒரு இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலர். தன் 23 வது வயதில் கேம்பிரிட்ஜில் லுகேசியன் பேராசிரியரானார். 1762 இல் அவருடைய Miscellania Analytica பிரசுரமாகியது. இதனில், சமன்பாட்டுக் கோட்பாடு, எண் கோட்பாடு, வடிவவியல் முதலியவைகளைப் பற்றிய கட்டுரைகளும் விபரங்களும் இருந்தன. இந்நூல் பலமுறை திருத்தி எழுதப்பட்டு இன்னும் பலவும் சேர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய நடை எல்லோருக்கும் எளிதில் புரிகிறபடி இல்லாததால் அவருடைய நூல்களை மற்றவர்கள் படித்தார்களா என்று அவரே ஐயப்பட்டதுண்டு.
1763 இல்ராயல் சொஸைட்டியின் ஃபெல்லோ ஆனார். 1784 இல் அதனுடைய சிறப்புப்பரிசான கோப்லி மெடலைப் பெற்றார். 1795 இல் ஏழ்மை என்ற காரணம் காட்டி ராயல் சொஸைட்டியிலிருந்து ராஜினாமா செய்தார்.
1767 இல் மருத்துவப் பட்டம் பெற்றார்.
எண் கோட்பாட்டில் அவருடைய பெயருடன் புகழடைந்த தேற்றம் முதலில் அவருடைய நூலில் ஒரு யூகமாக அறிவிக்கப் பட்டது. இருபதாவது நூற்றாண்டில் இது எண் கோட்பாட்டில் பல பயனுள்ள ஆய்வுகளை ஊக்குவித்தது.