எடுப்பார் கைப்பிள்ளை
எடுப்பார் கைப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | என். வி. ஆர். பிக்சர்ஸ் |
இசை | எம். பி. ஸ்ரீநிவாசன் |
நடிப்பு | ஜெய்சங்கர் சுபா ஸ்ரீகாந்த் |
வெளியீடு | 1975 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எடுப்பார் கை பிள்ளை (Eduppar Kai Pillai) என்பது 1975 இல் கே. விசயன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பானுமதி, ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா, குமாரி மஞ்சுளா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1975 செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- பி. பானுமதி
- ஜெய்சங்கர்
- வெண்ணிற ஆடை நிர்மலா
- குமாரி மஞ்சுளா
- எம். ஆர். ஆர். வாசு
- மேஜர் சுந்தரராஜன்
- ஸ்ரீகாந்த்
- சுருளி ராஜன்
- மனோரமா
- பாஃரியல் (விருந்தினர் தோற்றம்)
- ஆர். நீலகண்டன்
- டி. கே. ராமச்சந்திரன்
பாடல்கள்
[தொகு]எம். பி. சீனிவாசன் இசையமைத்த இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[1]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |||||||
1. | "கிஸ் மீ சன்" | பி. பானுமதி | ||||||||
2. | "அழகு இராணி" | பி. சுசீலா | ||||||||
3. | "பொன் மயங்கும்" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | ||||||||
4. | "மீட் மை சன்" | பி. பானுமதி |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]எடுப்பார் கைப்பிள்ளை 1975 செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது.[2] கல்கியின் கந்தன் என்பவர் பானுமதி, எம். ஆர். ஆர். வாசு, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரின் நடிப்பைப் பாராட்டினார். அதே நேரத்தில் மனோரமா, சுருளிராஜனின் நகைச்சுவை, தூயவனின் கதை, உரையாடல்கள், விஜயனின் இயக்கம், வெங்கட்டின் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார். இப்படத்தில் பெயருக்காக தலைப்பு வைக்கப்பட்டது போல் உள்ளது என்றும்[3] தோல்வியடைந்த இத்திரைப்படம் சட்டம் என் கையில் (1978) திரைப்படத்தின் தழுவலாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eduppar Kai Pillai (EMI) [1975-EPRip-WAV]". TamilFLAC.Com. Archived from the original on 23 December 2023. Retrieved 27 December 2023.
- ↑ "செப்டம்பர் 19ம் தேதியில் வெளியான படங்கள்..." Screen 4 Screen. 26 September 2020. Archived from the original on 27 December 2023. Retrieved 27 December 2023.
- ↑ கந்தன் (5 October 1975). "எடுப்பார் கைப்பிள்ளை". கல்கி. p. 71. Archived from the original on 10 December 2023. Retrieved 27 December 2023 – via Internet Archive.
- ↑ "வல்லவன் ஒருவன்". இந்து தமிழ் திசை. 8 July 2016. Archived from the original on 11 August 2023. Retrieved 28 December 2023.
- ↑ தீனதயாளன், பா. (26 December 2015). "பானுமதி: 10. டாக்டர் பானுமதி!". தினமணி. Archived from the original on 27 September 2021. Retrieved 28 December 2023.