எடி மாபோ
எடி மாபோ | |
---|---|
![]() | |
பிறப்பு | எடி கொய்கி சாம்போ 29 சூன் 1936 மறி, தொரெசு நீரிணைத் தீவுகள், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா |
இறப்பு | 21 சனவரி 1992 பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா | (அகவை 55)
எடி கொய்க்கி மாபோ (Eddie Koiki Mabo, 29 சூன் 1936 – 21 சனவரி 1992[1]) ஒரு தொரெசு நீரிணைத் தீவுகளைச் சார்ந்த ஆத்திரேலியப் பழங்குடியினர் ஆவார். இவர் ஆத்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமைகளை மீட்டுக்கொடுக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக அறியப்படுகிறார். மேலும் இவர் வரலாற்றுப்பூர்வமான உயர்நீதிமன்ற வழக்காகிய "மாபோ எதிர் குயின்ஸ்லாந்து" வழியாகவும் அறியப்படுகிறார்.
இப்புகழ் பெற்ற வழக்கின் தீர்ப்பை அடுத்து 1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் - எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டு, தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த (native title) ஆத்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது.
மாபோவின் இயற்பெயர் "எடி கொய்கி சாம்போ"[2]. அவரின் உறவின் பென்னி மாபோ தத்தெடுத்த பிறகு, தன் கடைசிப் பெயரை மாபோ என்று மாற்றிக்கொண்டார்.[3] இவர் தொரெசு நீரிணைத் தீவுகளில் ஒன்றான மறி தீவில் பிறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.abc.net.au/schoolstv/australians/emabo.htm
- ↑ Mabo: The Man - Adoption at Screen Australia Digital Learning
- ↑ "Facts Sheet - Edward Koiki Mabo 1936–1992". Racism No Way. Archived from the original on 2008-02-25. Retrieved 2008-03-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Acquiring the Mabo Papers: Celebrating Edward Koiki Mabo". Archived from the original on 17 March 2011.
- Mabo, Gail. "Torres Strait Islands, Mer (Murray Island) and Eddie 'Koiki' Mabo". Archived from the original on 27 March 2012.
- "Eddie Mabo Biography". Retrieved 15 April 2018.
- Hi, I'm Eddie - Podcast by the State Library of Queensland. Winner 2021 Best Indigenous podcast, Australian Podcast Awards.
- யூடியூபில் Eddie Mabo's legacy continues
- Album of Photographs Relating to the Mabo Case on Mer Island 1989, State Library of Queensland