எசு. பி. சவாண்
Appearance
சங்கர்ராவ் பாவ்ராவ் சவாண் (S.B.Chavan 14 சூலை 1920–26 பிப்ரவரி 2004) இந்திய அரசியல்வாதி. இரண்டு முறை மகாராட்டிர மாநில முதல் அமைச்சராக இருந்தவர். நடுவணரசு அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.[1]
இளமைக் கல்வி
[தொகு]சென்னைப்பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் உசுமானியப் பல்கலைக் கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது அதில் கலந்துகொண்டார். வழக்குரைஞராகத் தம் தொழிலைத் தொடங்கினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]- 1957 ஆம் ஆண்டில் தரமாபாத் தொகுதியிலிருந்து பாம்பே மாநில சட்டமன்றத்திற்கும் 1962 இல் அதே தொகுதியிலிருந்து மகாராட்டிர விதான் அவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1967 1972 1978 ஆகிய ஆண்டுகளில் போக்கர் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1980ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அமைச்சரவையில் கல்வி அமைச்சர் ஆனார்.
- 1981 முதல் 1984 வரை திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.
- 1987 முதல் 1990 வரை நடுவணரசின் நிதி அமைச்சராக இருந்தார்.
- 1991 முதல் 1996 வரை ராஜ்ய சபாவில் காங்கிரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தார்.
- திலக் மகாராட்டிர பல்கலைக் கழகத்தில் வேந்தராகப் பதவியில் இருந்தார்.