உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. திவ்யதர்சினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசு. திவ்யதர்சினி (S. Divyadarshini) 2011 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளில் தன்னுடைய 24 ஆவது வயதில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.[1] முதல் முயற்சியில் வெற்றி பெற இயலாவிட்டாலும் அதன் பின்னர் ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து இரண்டாவது முயற்சியில் திவ்யதர்சினி இந்த வெற்றியை ஈட்டினார். 2012-13 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்று தனது ஆட்சிப் பணியை தொடங்கினார்.

2013-15 ஆம் ஆண்டுக் காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் திருச்சி ஆட்சியராக இருந்த எசு.பி.கார்த்திகாவுக்கு பதிலாக இவர் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] [3][4] [5]மிகவும் எளிமையான தோற்றம், நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றால் மிக குறுகிய காலத்தில் மக்களிடம் நற்பெயர் பெற்று தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். துணை உள்துறை செயலாளராகவும், பொதுப்பணித்துறை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராகவும் இவர் நியமிக்கப்பட்டார். தருமபுரி மாவட்டத்தின் 44-ஆவது ஆட்சியராக 19.05.2021 அன்று எசு.திவ்யதர்சினி பொறுப்பேற்றார். தற்போது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திவ்யதர்சினி சென்னையில் பிறந்து வளர்ந்தார்.[6] தந்தை வி சண்முகம் ஒரு தனியார் ஆலோசகராகவும், தாய் எசு பத்மாவதி ஒரு இல்லத்தரசியாகவும் உள்ளனர். பெங்களூரில் வேலை செய்யும் பிரியதர்சினி என்றொரு அக்காவும் கோகுல்நாத் என்ற ஒரு தம்பியும் சேர்ந்தது திவ்யதர்சினியின் குடும்பமாகும். நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் 10 ஆம் வகுப்புத் தேர்வில் 74% மதிப்பெண்களையும், 12ஆம் வகுப்பில் 86% மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்றார். பிறகு சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.[7]

செயல்பாடுகள்

[தொகு]
  • மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வரும் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து உடனடியாக தொடர்புடைய துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றார்.
  • மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மேடைகளில் உத்வேகத்துடன் பேசி மாணவர்களின் கவனத்தை ஈர்த்தார்.
  • மருத்துவத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 33 பேரை நேரில் அழைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
  • மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், இளைஞர்கள் என அவர்களது தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டார். மணியம்பாடி பகுதியில் திருந்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட நவரை நெற்பயிரை ஆய்வு செய்ததோடு, வயயில் இறங்கி நெற்கதிர்களை அறுவடை செய்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
  • தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் இல்லம் தேடிக் கல்வி திட்ட மையத்தினைத் திறந்து வைத்து மாணவ மாணவிகளுடன் கலந்து உரையாடினார். கொண்டகர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வத்தல்மலை அரசு பள்ளியை ஆய்வு செய்யச் சென்று அங்கு குழந்தைகளுடன் உரையாடல் நிகழ்த்தினார்.
  • ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தினார்.
  • தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஆட்சியர் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்கல சீறுந்து வாங்கச் செய்து அதன் சேவையை தொடங்கி வைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IAS EXAM". தினமணி. https://www-dinamani-com.translate.goog/latest-news/2011/may/11/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-351425.html?_x_tr_sl=ta&_x_tr_tl=en&_x_tr_hl=en&_x_tr_pto=sc. பார்த்த நாள்: 2 December 2022. 
  2. Correspondent, Special (2021-05-19). "S. Divyadarshini assumes charge as Dharmapuri Collector". The Hindu (in Indian English). Retrieved 2022-12-02. {{cite web}}: |last= has generic name (help)
  3. தினத்தந்தி (2021-03-28). "தேர்தல் பணியில் ஈடுபடும் 15,441 அரசு பணியாளர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்". www.dailythanthi.com. Retrieved 2022-12-02.
  4. தினத்தந்தி (2021-03-28). "ரூ.1 கோடி சிக்கியதில் உரிய விசாரணை: முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் தேர்தல் நடவடிக்கை; திருச்சி புதிய கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி பேட்டி". www.dailythanthi.com. Retrieved 2022-12-02.
  5. "திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? - மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி பதில்". Hindu Tamil Thisai. Retrieved 2022-12-02.
  6. "திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்.". ஆனந்த விகடன். https://www.vikatan.com/news/cinema/6115--2. பார்த்த நாள்: 2 December 2022. 
  7. "IAS topper is a lawyer". Deccan Herald (in ஆங்கிலம்). 2011-05-12. Retrieved 2022-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._திவ்யதர்சினி&oldid=3614785" இலிருந்து மீள்விக்கப்பட்டது