உள்ளடக்கத்துக்குச் செல்

எக்சு.கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சு.கோட் என்பது மாக்.ஓஎசு, ஐஓஎஸ் போன்ற ஆப்பிள் தளங்களுக்கு மென்பொருள்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒருங்கிணை விருத்திச் சூழல் ஆகும். இது மாக் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும். இதை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். முதன் முறையாக இது 2003 இல் வெளியிடப்பட்டது. பிந்திய பதிப்பு எக்ஸ்கோட் 5 ஆகும். இந்தப் பதிப்பு தற்பொழுது இலவசமாக அப்பிள் அப் ஸ்டோரில் கிடைக்கின்றது. அப்பிளுடன் தம்மை மென்பொருள் வல்லுனர்களாகப் பதிவு செய்துகொண்டவர்கள் எக்ஸ்கோட் புதிய பதிப்புக்கள் பொதுப் பாவனைக்கு திறந்துவிட முன்னர் பீட்டா பதிப்புகளை பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சு.கோட்&oldid=3105955" இலிருந்து மீள்விக்கப்பட்டது