எக்கோ (யானை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்கோ
பிறப்புசுமார் 1945
அம்போசேலி தேசியப் பூங்கா, கென்யா
இறப்புமே 3, 2009(2009-05-03) (அகவை 63–64)

எக்கோ (Echo) என்பது ஓர் ஆப்பிரிக்கப் புதர் யானையாகும். பெண்யானையான இது 1973 ஆம் ஆண்டு தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக விலங்கின நடத்தையியல் நிபுணர் சிந்தியா மோஸ் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டது மேலும் பல புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் பொருளாகவும் இருந்தது.[1] நிலத்தில் வாழும் பாலூட்டி பற்றிய மிக நீண்ட ஆய்வான அம்போசேலி யானை ஆராய்ச்சி திட்டத்தின் முதல் பொருளாக இந்த யானை இருந்தது. இது யானைகளின் வாழ்க்கைச் சுழற்சிகள், தகவல் தொடர்பு முறைகள், உணர்ச்சி வாழ்க்கை மற்றும் கன்றுகளின் கூட்டுப் பராமரிப்பு உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்ள எக்கோ மற்றும் அதன் குடும்பத்தைப் பற்றிய ஆய்வு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.[2]

எக்கோ மே 3,2009 அன்று தனது 63 அல்லது 64 வயதில் இறந்தது.[2] பொது ஒளிபரப்புச் சேவை மற்றும் பிபிசி ஆகியவற்றின் பல ஆவணப்படங்களுக்கு எக்கோ ஒரு கருப்பொருளாக இருந்தது. சிந்தியா மோஸ் எக்கோவைப் பற்றியும் அதன் குடும்பத்தைப் பற்றியும் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Echo the African Bush Elephant". BBC Nature. பார்க்கப்பட்ட நாள் 24 March 2013.
  2. 2.0 2.1 2.2 "An Elephant to Remember". PBS. 16 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்கோ_(யானை)&oldid=3956678" இலிருந்து மீள்விக்கப்பட்டது