உள்ளடக்கத்துக்குச் செல்

ஊனுண்ணி தாவர சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊனுண்ணும் தாவர சங்கம்
The Carnivorous Plant Society
சுருக்கம்ஊ.தா.ச
உருவாக்கம்1978; 46 ஆண்டுகளுக்கு முன்னர் (1978)
வகைபதிவு செய்யப்பட்டது
சட்ட நிலைஇணைக்கப்படாதது
நோக்கம்ஊனுண்ணும் தாவரங்களைப் பற்றிய ஆய்வில் பொதுமக்களின் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் அத்தகைய தாவரங்களின் பாதுகாப்பை ஊக்குவித்தல்
சேவை பகுதி
ஐக்கிய இராச்சியம் மற்றும் உலகமெங்கும்
வலைத்தளம்www.thecps.org.uk

ஊனுண்ணி தாவர சங்கம் (The Carnivorous Plant Society) இங்கிலாந்தின் இலண்டன் நகரில் 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது விலங்குண்ணும் தாவரங்களின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே தொண்டு நிறுவனமாகும் [1] . இதன் தொண்டு நோக்கங்கள் ஊனுண்ணும் தாவரங்களைப் பற்றிய ஆய்வில் பொதுமக்களின் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் அத்தகைய தாவரங்களின் பாதுகாப்பை ஊக்குவித்தல்" [2] போன்றவையாகும் .

இந்த சங்கம் அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படும், அரச தோட்டக்கலை சங்கத்துடன் இணைக்கப்படாத உறுப்பினர் சங்கமாகும். பிளான்டா கார்னிவோரா என்ற அரையாண்டு இதழையும் ஒரு காலாண்டு செய்திமடலையும், ஊனுண்ணும் தாவரங்களுக்கான வளரும் வழிகாட்டியையும் வெளியிடுகிறது. அரச தோட்டக்கலை சங்க செல்சியா மலர் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்வுகளில் இச்சங்கம் தாவரங்களைக் காட்சிப்படுத்துகிறது மற்றும் கல்விப் பொருட்களை வழங்குகிறது. ஊனுண்ணும் தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்கிறது, ஐக்கிய இராச்சிய ஊனுண்ணும் தாவர மன்றத்திற்காக ஓர் இணையதளத்தையும் ஒரு விதைவங்கியையும் பராமரிக்கிறது.

செய்தி இதழின் தற்போதைய ஆசிரியர் முனைவர் மார்ட்டின் சீக் ஆவார். அட்ரியன் சுலாக், சிடீவர்ட் மெக்பெர்சன் மற்றும் ஆலன் லோரி ஆகியோர் முந்தைய பங்களிப்பாளர்களில் அடங்குவர்.

இச்சங்கம் 2016 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஊனுண்ணும் தாவர சங்க மாநாட்டையும், 2011 ஆம் ஆண்டு ஊனுண்ணும் தாவர ஐரோப்பிய கண்காட்சி மற்றும் பரிமாற்ற நிகழ்வுகளையும் நடத்தியது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊனுண்ணி_தாவர_சங்கம்&oldid=3634289" இலிருந்து மீள்விக்கப்பட்டது