ஊதல்
Appearance
ஊதல் தமிழக நாட்டுப்புறச் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு. 1950-க்குப் பிறகு இந்த ஊதல் ஒலி மறைந்துவருகிறது.
ஊதும் ஆட்ட விவரம்
[தொகு]ஆடுபவர் பூவரச இலை, :வாழையிலைத் துண்டு போன்றவற்றைச் சுருட்டி வைத்துக்கொண்டும், அழிஞ்சில் கொட்டையைத் துளைபோட்டு வைத்துக்கொண்டும் ஊதி ஒலியெழுப்பி மகிழ்வர். விரலை மடித்து வாயில் வைத்து ஊதுவதற்குச் சீழ்க்கை என்று பெயர். இதனைச் சங்கப்பாடல்கள் வீளை எனக் குறிப்பிடுகின்றன.