உள்ளடக்கத்துக்குச் செல்

ஊட்டுகுளங்கரா பகவதி கோயில், பெருவெம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊட்டுகுளங்கரா பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெருவெம்பா கிராமத்தில் அமைந்துள்ள இந்து கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார்.இங்கு கணபதி, அய்யப்பன். ஆகிய துணைத்தெய்வங்களும் உள்ளன.

வரலாறு

[தொகு]

நீண்ட நாள்களுக்கு முன் வனப்பகுதியில் நடுவில் ஒரு பெண்மணியின் இசையை ஒரு பாணன் இனத்தைச் சேர்ந்தஒருவர் கேட்டார். தொடர்ந்து அது நெருங்கிவர ஆரம்பித்தது. அது ஒரு ஆனந்தத்தைத் தரும் குரலாக இருந்தது. அதைத்தொடர்ந்து கேட்க விருப்பமா என்று அசரீரி கேட்கவே, அவன் ஆம் என்று தன் விருப்பத்தைக் கூறி, அந்தப் பாடகியைக் காண விரும்பினார். அப்போது அக்குரல், பாடகியைக் காண விரும்பினால் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண் மூலமாகப் பார்க்கக்கூறியது. அவரும் அவ்வாறே செய்தார். அப்போது ஒரு கண்கொள்ளாக்காட்சியைக் கண்டார். ஊஞ்சலில் ஒரு அழகான பெண்மணி பாடிக்கொண்டிருந்தார். தன் இனத்தவரை அழைத்துச் செய்த கூறினார். தொடர்ந்து அவ்விடத்தில் தேவியை அமைத்தனர். [1]

நடை திறந்திருக்கும் நேரம்

[தொகு]

கோயில் நேரம் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காணிக்கை

[தொகு]

டிசம்பர் மாதத்தில் பாதம் பதியகம் எனப்படுகின்ற சந்ததம், கடமதுர பாயசம், வில்லு ஆகியவை காணணிக்கையாகும். மூன்று கால பூசை, உதயாஸ்தமன பூசை உள்ளிட்ட பூசைகள் நடத்தப்பெறுகின்றன.

அமைவிடம்

[தொகு]

ஊட்டுகுளங்கரா பகவதி கோயில் பெருவெம்பா சந்திப்பில் இருந்து 1.4 கி.மீ. தொலைவில் உள்ளது. பெருவெம்பா கிராமம் பாலக்காடு நகரத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயிலானது பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]