ஊசேடம் தீவு
Nickname: சூரியத் தீவு | |
---|---|
பால்ட்டிக் கடலில் ஊசேடம் தீவு | |
புவியியல் | |
அமைவிடம் | பால்டிக் கடல் |
பரப்பளவு | 445 km2 (172 sq mi) |
நீளம் | 66.4 km (41.26 mi) |
அகலம் | 23.9 km (14.85 mi) |
கரையோரம் | 110 km (68 mi) |
உயர்ந்த ஏற்றம் | 69 m (226 ft) |
உயர்ந்த புள்ளி | கோல்ம் |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 76,500 |
அடர்த்தி | 172 /km2 (445 /sq mi) |
ஊசேடம் (Usedom; இடாய்ச்சு மொழி: Usedom, போலியம்: Uznam, ஊசுனம்) என்பது பால்டிக் கடல் தீவு ஆகும். இது செருமனிக்கும் போலந்துக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. இது ரூகனுக்குப் பிறகு இரண்டாவது பெரிய பொமரேனியன் தீவும், பால்டிக் கடலில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவும் ஆகும்.
இதன் 80% நிலப்பரப்பு செருமனியில் உள்ளது. இதன் கிழக்குப் பகுதியும், தீவின் மிகப்பெரிய நகரமுமான சுவினோயித்சி போலந்தில் உள்ளது. தீவின் மொத்தப் பரல்லு 445 சதுர கிலோமீட்டர்கள் (172 சதுர மைல்கள்) (செருமானியப் பகுதி: 373 சதுர கிலோமீட்டர்கள் (144 சதுர மைல்கள்); போலந்துப் பகுதி: 72 சதுர கிலோமீட்டர்கள் (28 சதுர மைல்கள்). தீவின் மக்கள்தொகை 76,500 (செருமனியில் 31,500; போலந்தில் 45,000).
ஊசேடம் தீவு செருமனி, போலந்து பிராந்தியத்திலேயே சராசரி சூரிய ஒளி அதிகமாக உள்ள இடம் ஆகும். அத்துடன், பால்ட்டிக் கடலில் அதிக சூரிய ஒளி உள்ள இடமும் இதுவாகும்.[1] இதனால் இது "சூரியத் தீவு" எனவும் அழைக்கப்படுகிறது.[2]).
தாழ்வுப் பகுதியான இத்தீவில் விளையும் வேளாண்மைப் பொருள்களில் தானியமும், உருளைக் கிழங்கும் குறிப்பிடத் தக்கவையாகும். சுற்றுலாவிற்கும், மீன் பிடிக்கவும் இத்தீவு சிறப்புப் பெற்றுள்ளதால் மிகுதியான வருவாய் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "According to meteorological records of the last 30 years: Usedom is the sunniest region of Germany". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
- ↑ S.A., Wirtualna Polska Media (15 July 2013). "Wczasy nad morzem - Świnoujście, Uznam, Wyspa Słońca". wp.pl. பார்க்கப்பட்ட நாள் 23 March 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Usedom
- பொதுவகத்தில் ஊசேடம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Usedom.de: Official Usedom webpage
- Visitusedom.com: Official Island of Usedom tourism website